பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 65 பற்றுக்கொள்ளும் என்று கூறுவதற்கு இல்லை. இதிலிருந்து ஓர் உண்மை புலப்படும். பற்று அறுத்தல் என்பது, எல்லா மனங்களும் ஒரே வகையான பொருள்களிடமிருந்து பற்று அறுதல் என்பது அன்று. எந்தெந்த மனம் எந்தெந்தப் பொருளினிடத்துப் பற்றுக்கொண்டிருக்கிறதோ அந்த அந்தப். பற்றை அறுத்தல் வேண்டும் என்பதே கருத்து.' பெரியபுராணத்தில் கூறப்பெற்றுள்ள அத்தனை பேரும் ஒரே தன்மையான மனம் படைத்தவர்கள் என்று கூறிவிட முடியாது. இவர்கள் அனைவரும் ஒரே பயனைப் பெற்றாலும், மேற்கொண்ட வழிகள் பலப்பல். மிகப் பழங் காலத்திலிருந்தே, மக்கள் சமுதாயம், பல்வேறுபட்ட மன நிலையையும் மனத்தத்துவ நி ைல ைய யும் கொண்டுள்ளவர்களால் நிறைந்தது என்ற உண்மையைப் பெரியோர்கள் நன்கு அறிந் திருந்தனர். இந்தப் பெருங் கூட்டத்துள். சிலர் முற்கூறியப் உயர்நிலையை அடையக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள்; அதற்குரிய முயற்சியை மேற்கொள்ளக் கூடியவர்கள். மிகப் பலர் இத்தகைய தகுதியும் முயற்சியும் இல்லாதவர்கள். அவ்வவர் முயற்சிக்கும் தகுதிக்கும் ஏற்றபடியே வழிகள் பலவாக அமைந்துள்ளன. பற்று அறுத்தல் என்ற பயனைப் பெறக்கூடப் பல வழிகள் உள்ள காரணம் இதுவேயாகும். ஆகவே, ஒரு வழியைவிட மற்றொன்று சிறந்தது என்று கூறுகிற வாதம் பொருத்தமற்றது. ஒரே வழியில் செல்லும் அனைவருங்கூடப் பயன் வரையில் சென்று சேர்வார்கள் என்று கூறுவதற்கில்லை. பல சமயங்களில், முயற்சிக் குறை வாலும் சக்திக்கு மேற்பட்ட காரணங்களாலும் பாதி வழியில் நின்றுபோனவர்களும் உண்டு. உலகிடை வாழும் மக்கட் கூட்டத்தின் வேறுபட்ட பல மனநிலைகளையும், அம் மனநிலைகட்கேற்பப் பல்வேறு வழிதுறைகள் அமைந்திருத் தலையும், அவ்வழிகளிற் செல்வோர் பலர், சிறு பயன் கண்டு மீள்வதையும், சிலர் முழுப் பயன்கண்டு மீள்வதையும் ருமரகுருபர அடிகளார் இயற்றிய அடியிற் காணும் பாடல் நன்கு விளக்குகிறது : தேசீ.-5