பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68 岛 தசிய - இலக்கியம் கேட்பதற்கே அச்சந்தான். உண்மையில், அடியார் என்ற சொல் சிறப்புடையதாகவே காணப்பெறுகிறது. கடவுளுக்கு அடிமை என்று கூறியவுடன் சீறிவிழும் சகோதரர்கள் பலர், பலவற்றிற்கு அடிமைகளாக இருப்பதை மறந்துவிடுதல் ஆகாது. கேவலம் காப்பிக் குடியிலிருந்து எத்தனையோ பொருள்களுக்கு அடிமைகளாக நாம் இருக்கிறோம். பொருள்கள் ஒருபுறம் இருக்கட்டும். வெறும் சொற்களுக்குக்கூட அல்லவா அடிமைகளாக இருக்கிறோம்? யாதேனும் ஒரு கட்சி; அக் கட்சியினுடைய கொள்கைகள் என்று சில. அவற்றிற்கெல்லாம் அறிவுபடைத்த மனிதன் அடிமை. சில சந்தர்ப்பங்களில் சில கூச்சல்களுக்குக் கூட நாம் அடிமை களாகி விடுகிறோம். எனவே, ஏதேனும் ஒன்றுக்கு அடிமை ஆதல் ஒன்றும் வியப்பில்லை! கண்ணால் காணக்கூடிய காப்பிக்கும், கட்சிக்கும், அடிமைத்தன்மை பூண்ட நாம், காணாத கடவுளுக்கு அடிமை ஆதலைப்பற்றி வியப்புற வேண்டியதில்லை; சீற வேண்டியதுமில்லை. இஃது ஒருபுறம் இருக்க, இவ்வடியார்களைப்பற்றிச் சுற்று விரிவாகக் காணலாம். பற்று அற்ற ஒருவனையே பெரியவன் என்று உலகம் போற்றும் என்றும், அவனே விடுதலை பெறக் கூடிய தகுதி வாய்ந்தவன் என்றும் முற்பகுதி யில் கண்டோம். இப் பற்று அறுதலே பயன் என்றும் அதற்குரிய வழிகள் பல என்றும் கண்டோம் பற்று அற்றவர் களையே அடியார்கள் என்று குறிப்பிடலாம். நான் என்ற, அகங்காரமும் எனது என்ற மமகாரமும் அற்றவர்களே அடியார்கள். இவை இரண்டையும் அறுத்தலே பற்று அறுத்தலுக்கு வழியாகும். மிகச் சுலபமாக இரண்டு வரிகளில் கூறப்படினும், நடைமுறையில் இஃது அவ்வளவு சுலபமாக முடிகிறது அன்று. நம்முள்ளே வேறுபாடு அற்றுப் பின்னிக் கிடக்கின்ற நான்’ என்ற உணர்ச்சியைப் போக்குவது அவ்வளவு எளிதன்று. இதனைச் செய்து முடிப்பதற்கு மக்கள் சமுதாயம் பலவழிகளைக் கையாண்டு அனுபவம் பெற்றது. இவை எல்லால் சமய அனுபவங்கள் என்று குறிக்கப்பெறும்.