பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தேசீய இலக்கியம் போராடுதே என்ற பாடலில் தாயுமானவர் குறித்துள்ளார். இவ்வளவு கடினமான செயலைச் செய்ய இவ்வடியார்கள் ஒர் உதவியை நாடினர். உலகியலில் இவ்வனுபவம் நமக்கு ஏற்படுகிறதல்லவா? உடலுக்குத் தீங்கு ஏற்பட்டால் உடற்கூறு அறிந்த மருத்துவன் உதவியை நாம் நாடுகிறோம். மனத்தை அடக்க வேண்டுமானால் மனம் அடங்கப் பெற்றான் ஒருவன் உதவி தேவை. அவனே, பொறி வாயில் ஐந்து அவித்தான்' என்றும் கூறப்பெறுகிறான். இத்தகைய முழு முதற்பொருள் ஒன்றின் உதவி இல்லாவிட்டால் உலகிடை ஒன்றும் நடை பெறாது. மற்றவை ஒருபுறம் நிற்க, மனஅடக்கம் வேண்டுபவன் இவ் உதவியைப் புறக்கணிக்க முடியவே முடியாது. - சுருங்கக் கூறுமிடத்து, மன அடக்கமே இறைவனை வணங்க வழியாகும் அவனை வணங்க வேண்டுமென்றாலும் அதற்கும் அவனுடைய அருள்தான் துணை நிற்கவேண்டும். இது கருதியே மணிவாசகப் பெருந்தகை, 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று அருளினார். இங்ங்ணம் அவனருளாலே அவன் தாள் வணங்கும் பேறு பெற்றவர் களையே அடியார்கள் என்று கூறுகிறோம். இதனை அடுத்துத் தான்றும் வினா, ஏன் இவ்வாறு வணங்க வேண்டும்? என்பதாகும். இவ்வினாவின் விடை இரு பகுதிகளாக அமையும். முற்கூறிய வணக்கம் அடியார்கள் மட்டும் செய்வது அன்று. சாதாரண மக்களுங்கூடச் செய். கின்றனர். வணக்கம் என்ற முறையில் இரண்டும் ஒன்றாயினும் வணக்கத்தின் அடிப்படைக் காரணம் மாறுபட் டுள்ளது. அடியார்கள் வணங்குவதற்காகவே வணங்கு பவர்கள். ஏனையோர் வணங்குதலாகிய செயலுக்கு வேறாக ஒரு பயனைக் கருதி வணங்குபவர். வாழ்த்துவதும் வானவர் கள் தாம் வாழ்வான்வேண்டி, என்ற திருவாசகம் இவ் வுண்மையை நினைவூட்டுகிறது. இத்தகைய மக்கள், வணக்கத்தை ஒரு கருவியாகக் கொள்கிறார்கள். இக்கருவி