பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 73 .........அமர்ந்தியாம் நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன் பயம் இன்னும் இன்னும் அவை ஆகுக தொன்முதிர் மரபின்கின் புகழினும் பலவே" (யாம் மறுபடியும் உன்னை வணங்குவதன் பயன், மேலும் மேலும் உன்னை வணங்கவேண்டும் என்பதேயாம்.) என்று முடிவுறுகிறது பாட்டு. புலவரும் அவரைச் சார்ந் தோரும் செவ்வேள்ை விரும்பி அடுத்தடுத்து வழிபடுவதற்குப் பயன் மீண்டும் மீண்டும் அவ்வழிபாட்டு முறைகளே தம்பால் வளர்தல் தாம் எ று இதனால் தெளிவாகிறது. இந்தக் கருத்தைச் சங்க நூல்களில் பல இடங்களில் காண முடியா விடினும், இது பழந்தமிழருக்குப் புதிதன்று என்று சொல்ல லாம். ஆயினும், ஏறத்தாழ நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில்தான் இக் கொள்கை வலுவடைந்தது. கும்பிடுதல் வழியன்று; பயன் அதுவே என்ற எண்ணம் வலுவாக வளர்ந்தது - இவ்வாறு கூற அவர்கள் பாடல்களே நமக்கு உதவு கின்றன. பிறவியின் பயன் வணங்குவதே என்ற கருத்துக் கீழ்வரும் பாடல்களில் இடம் பெறுதல் காண்க. ‘வாழ்த்த வாயும் நினைக்க மடகெஞ்சம் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை என்றும், தலையே நீ வணங்காய்' என்றும் வரும் பகுதி கள் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. 'அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தங் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று ஆள்வார் பாடியதைவிட இன்னும் விரிவாக இக் கருத்தைக் கூற முடியாதன்றோ? இங்ங்னம் கும்பிடுவதை யல்லாமல் பிறவியில் செய்ய வேண்டுவன வேறு இருப்பதாக