பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தேசிய இலக்கியம். அன்புடையார் என்று குறிப்பிட்டமையின் உலகியலுக்கு உட்பட்டு வாழ்பவர்கள் என்பதும் பெறப்படுகிறதன்றோ? இத்தகைய வாழ்க்கையை மேற்கொள்ள இவ்வடியார் கட்கு மட்டும் எவ்வாறு முடிகிறது? பக்தி வழி என்ற ஒன்றை இவர்கள் கடைப்பிடித்தமையால்தான் இது இயன்றது, பக்தி என்றால் என்ன? அன்பு. நம்மால் அன்பு செய்யப்படுகிறவர் நம் பக்கத்திலேயே இருக்கவேண்டும் என்றுதானே விரும்புகிறோம்? இதே மனநிலைதான் அடியார் களிடம் காணப்பெறுகிறது. கடவுளைக் கடந்த பொருளாக இவர்கள் நினைக்கவில்லை. அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'யாகவே கண்டனர். அன்பு வலையுள் அகப்பட்ட அவனை ஓயாது கண்டு இன்புற்றிருக்க நினைந்தனர். அதுவே வாழ்க்கையின் பயன் என்று கருதினர். இதில் தவறு ஒன்றும் இல்லையன்றோ? அறிவால் தேடி அடைய முடியாத ஒரு பொருளை, அன்பால் தேடி அடைந்த இவர்கள், அவ்வன்பின் துணையால் அப் பொருளை எப்பொழுதும் தங்கள் பக்கத்திலேயே இருத்திக்கொள்ள விழைந்தனர். அப் பொருளைப் பயனாகவும், அதனை அடையும் அன்பை வழியாகவும் இவர்கள் கருதவில்லை. ஏன்? அவன் வேறு. அன்பு வேறு என்று கருதினால்தானே வழி, பயன் என்ற ஆராய்ச்சி எல்லாம் தோன்றும்? - • 'அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்’ - (திருமந்திரம், 270) என்ற பேருண்மையை அறிந்துவிட்டார்கள். ஆதலின் வழியும் பயனும் ஒன்று என்ற பேருண்மையையும் அறிந்த வர்களாயினர். இதுவே தமிழ்நாட்டு அடியார்கள் கண்ட பக்திமார்க்கப் பேருண்மை. இவ்வுண்மையை அறிந்தவர் களே அடியார்களாவர். - இவ்வுண்மையை அறிந்துகொள்ளாமையின் ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற மேனாட்டு அறிஞர், தமது வழியும் பயனும்: