பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தேசீய இலக்கியம் மேல் நாடுகள் அனைத்திலும் சரித்திரம் என்று கூறப் பெறும் காட்டு வரலாறு இருக்கிறது இந்தத் தமிழ்நாட்டுக்குத் தனியான வரலாறு என்று ஒன்றுகூட இல்லை என்று வருந்திக் கூறுகிறவர்கள் உண்டு. மேலை நாடுகளில் உள்ள சிறந்த சரித்திரம் என்று இவர்கள் கூறும் நூல்களைச் சற்றுப் பார்த்தால் ஓர் உண்மை நன்கு விளங்கும். மேல் நாடுகளில் சரித்திரம் உண்டு. ஆனால், அவை உண்மையான நாட்டு வரலாறா? மக்கள் வரலாறா? என்று கேட்டால், துணிந்து இல்லை என்று கூறி விடலாம். இங்கிலாந்து தேச சரித்திரம் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வண்டிகளில் ஏற்றக் கூடிய அளவு நூல்கள் உண்டு. அவற்றில் சிறந்த ஒன்றை எடுத்துப் புரட்டினால் ஏமாற்றமே ஏற்படும். இங்கிலாந்து மக்களின் சரித்திரத்தை நாம் தேடப் போக, அங்கே கிடைப்பது இங்கிலாந்து மன்னர்களின் சரிதமேயாகும். அதுதானும் ஒழுங்காக இருக்குமா என்றால், இல்லை. எட்டாவது ஹென்றி எத்தனை மனைவிகளை மணந்தான். எத்தனை பேர்களை, எவ்வாறு கொன்றான் என்று கூறப் பெற்றிருக்குமே தவிர, அவன் என்ன நினைந்தான். எப்படி வாழ்ந்தான் என்ற விவரங்கள் இரா. தேதிகளை நிர்ணயிப்பதே தம் கடமை என்ற முறையில் தான் சரித்திரங்கள் எழுதப்பெறுகின்றன. இத்தகைய சரித்திரங்களை வைத்துக்கொண்டுதான் அந்த நாட்டார் பெரிதும் கர்வம் கொள்ளுகின்றனர். தேதிகள் மட்டுந்தான் சரித்திரத்தின் உயிர்நாடி என்றால் நம்மிடம் சரித்திரம் இல்லைதான். "வரன் முறையான தேதிகளைக் கூறுவதே சரித்திரத்தின் கண்களாகும் என்று கூறினால், தமிழ்நாட்டு வரலாறு என்றும் குருடாகவே இருக்கும். ஆனால், "சரித்திரம் என்பது மக்கள் வாழ்க்கை முறையைக் கூறுவதுதான் என்றால், தென்னாட்டு வரலாறு நல்ல முறையில் இலக்கியத் தின்மூலம் கூறப்பெறுகிறது என்று பி. டி. சீனிவாச ஐயங்கார் தென்னாட்டு வரலாறு என்ற தம் நூலில் குறிக் கிறார். ஆனால், சரித்திரம் என்பது அது தானா? மக்கள்