பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 81 அவர் நூலுக்குப் பயன்படா. அந்தப் பொருள்களிலிருந்து அவருக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு ஏனைய வற்றை விட்டுவிடவேண்டும். இச் செயலில்தான் ஆசிரி யரின் முழு வன்மையையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவும் தேடிப் பொறுக்கிக்கொண்ட பிற கு ம், பிற்காலத்தில் வாழும் ஓர் ஆசிரியர் சரிதத் தலைவரை நன்கு அறிந்துகொண்டார் என்று கூறிவிட இயலாது. ஆசிரியர். சரிதத் தலைவரின் காலத்திய சூழ்நிலைக்குச் செல்ல' வேண்டும். அக்காலத்துச் சரித்திரத்தை நன்கு அறிய வேண்டும்; அக் காலத்து மக்கள் மனநிலையையும் அறியவேண்டும். அந்தச் சூழ்நிலையில் வாழ்ந்த சரிதத் தலைவர் எவ்வாறு நடந்து வாழ்ந்திருப்பார் என்பதையும் நன்கு அறிதல்வேண்டும். இவ்வளவிற்கும் பிறகு அவ் ஆசிரியர் எழுதும் சரிதம்ே சிறந்ததாக இருக்கும், இங்ங்ணம் செய்யாமல், தமது சிறந்த புலமையால் மட்டும் வெற்றி கொள்ள முனைந்தால் அவ்வெற்றி நீண்டநாள் நிலைத்திராது. சிறந்த நடையில் கவிதையாக இருப்பினும் அதனைச் சரிதம் என்று கூறல் இயலாது. - - சரித்திரமே இதனின்று மாறுபட்டது. சரித்திரம் ஒரு சமுதாயத்தின் வரலாற்றைக் கூறுவது. சமுதாயத்தின் வரலாற்றில் ஒரளவு தனிமனிதர்கள் இடம் பெறினும் அவர் களுக்குப் பெருஞ்சிறப்பு அளித்தல் இயலாது. இவ்வாறு இ - ம் பெறுகின்ற தனிமனிதர்களும் சமுதாயத்தின் பேர்க்கை மாற்றவும், திருத்தவும் முயன்று வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்களே ஆவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இச் செயல் ஒரு பகுதியே ஆகும். அப் பகுதியை மாத்திரம் சரித்திரம் சுருக்கிக் கூறுமே தவிர அவர்கள் வாழ்க்கை பற்றிக் கூறுவதில்லை. இன்னும் கூறப்போனால் பல மனிதர்களுடைய முயற்சியின் தோல்வியே சரித்திரம் என்றுகூடக் கூறலாம். சமுதாயம் முழுவதையும் பிடித்து ஆண்ட மாறுதல்களும் புரட்சிகளும் சரித்திரத்தில் இடம் பெறும். காட்டாற்று வெள்ளம்போல் வந்த இந்து தேசி.-6