பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தேசிய இலக்கியம் மாறுதல்களைத் தனிமனிதர்கள் அடக்கமுடியாமல் போன கதையையே சரித்திரம் கூறுகிறது. இந்தச் செயல் மனிதர் களால் செய்யப்பட்டதாயின் நிலைபெறாது; கடவுளால் செய்யப்பட்டதாயின் அதனை மீற மனிதனால் முடியாது? என்று சரித்திரம் பற்றிய ஆங்கிலப் பழமொழி ஒன்று கூறுகிறது. இத்தகைய சரித்திரத்தை இலக்கியநலம் கருதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாலது. ஒரு காலத்தையும் அதன் சிறப்பையும் காட்ட எழுவது. இரண்டாவது ஒரு தனிமனிதனையோ சிலரையோ கூறி, அவர்கள் முயற்சியால் ஏற்பட்ட மாறுதல்களைக் குறிப்பது. மூன்றாவது, நிகழ்ச்சி களுக்குச் சிறப்புத் தருவது. இம் மூன்று பிரிவுகளில் இரண் டாவதாக உள்ள பிரிவினை அடிப்படையாகக் கொண்டதே சரிதமாகும். சரித்திரம் என்பது இம் மூன்றையும் உட் கொண்டு தோன்றுவது. சரிதம் சரித்திரத்தின் ஓர் உட்பிரிவு போலக் காணப்பெறினும் இலக்கிய வளர்ச்சியில் அது தனி இடம் பெற்றுவிட்டது. ஏனைய மொழி இலக்கியங்களில் தனி இடம் பெற்ற சரிதம், தமிழ்மொழி அளவில் வளர்ச்சி யடையாமல் நின்றுவிட்டது வருந்தத்தக்கதே. சேக்கிழா பெரியபுராணத்தைத் தவிர, சரிதம்' என்று கூறத் للأسابقة 5) தக்க தமிழ்நூல் எதுவும் இல்லை. சரிதம் தனிப்பட்ட மனிதர்களையும், அவர்கள் வாழ்க்கை, நினைவு. குறிக்கோள் முதலியவற்றைப் பற்றியும் பேசுவது. சமுதாயத்தின் வளர்ச்சியை அல்லது மாறுதலைக் குறிப்பது அதன் நோக்கம் அன்று. எனினும், சரிதம் யாருடைய வாழ்க்கையைக் கூறுகிறதோ அவரால் சமுதாயம் மாறுதல் அடைந்திருக்குமாயின், அந்தச் சரிதம் அதனையும் குறித்துத்தான் செல்லும். அதாவது மகேந்திர பல்லவன் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் நிலையைப் பெரிதும், மாற்றி அமைத்தார் ஒரு பெரியார். அவருடைய சரிதத்தைப் பெரியபுராணம் பாடிச் செல்கிறது. -