பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - தேசிய இலக்கியம் செய்யும் ஒருவனுடைய வரலாற்றை எந்த ஆசிரியனும் சரிதமாகக் கூறுவதில்லை. ஏதேனும் செயற்கருஞ் செயல் செய்தமையாலேயே ஒருவருடைய சரிதம் ஒர் ஆசிரியரால் கூறப்பெறுகிறது. தனி மனிதர் செய்த இச் செயற்கருஞ் செயலையே ஒரு சமுதாயங்கூடச் செய்ய முயன்றிருக்கலாம். ஆனால், அச் சமுதாயம் செய்த முயற்சியைக் கூறும் சரித்திரத்தைவிடத் தனிமனிதனைக் கூறும் சரிதம் சிறந்தது. ஒரு சமுதாயத்தின் சீரிய பண்புகளைக் கூறும் சரித்திரம் பரந்துபட்ட சூரிய ஒளி போன்றது. ஆனால், தனி மனிதனின் சரிதம், அச் சூரிய ஒளியை ஓரிடத்தில் சேர்த்துத் தரும் எரிக் கண்ணாடி (lens) போன்றது. ஆசிரியனும் தனது கலைத் திறமையைக் காட்டச் சிறந்த இடம் சரிதமே தவிரச் சரித்திரம் அன்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் வரலாற்றை அடிப்படையில் கொண்டு தோன்றி, நூற்றுக்கணக்கானவர் செயல்களால் நடைபெறுவது சரித்திரம். அவர்களைக் கொண்டு நடைபெறும் சரித்திரத்தில் கோவை ஒன்றும் இருத்தற்கில்லை. எங்கோ ஓரிடத்தில் சிறு தவறு நேர்ந் தாலும் முழுச் சரித்திரமும் மனத்தில் பதிக்கும் படம் நன்றாக இராது. ஆனால், சரிதத்தில் இத்தகைய தவறுகள் நேர வழி இல்லை. படிப்பவருக்கும் ஒரு முழுத்தன்மை பெற்ற படம் மனத்தில் தோன்றும். மற்றொரு வகையாகப் பார்த்தால், சரித்திரத்திற்கு உள்ள ஏறுநடை சரிதத்திற்கு இல்லை. தனிமனிதர்களைப் பற்றிக் கவலையுறாமல் இழைக்கின்ற விதிமுன் செல்லப் பின்னே நிகழும் பெரிய நிகழ்ச்சிகளைத் தனிமனிதர் சரிதங்களில் காண இயலாது. சேக்கிழார் இவ்விரண்டு பெரும் பிரிவுகளையும் நன்கு உணர்ந்திருக்கிறார். தமது சிறந்த கல்வி அறிவாலும், ஒப்பற்ற அனுபவத்தாலும் பிறர் காண இயலாத அருமை யான பகுதிகளையும் கண்டுள்ளார். மேலும், சோழப் பேரரசின் முதல் அமைச்சராய் இருந்த காரணத்தால்