பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 85 ஒவ்வொருவருடைய வரலாற்றையும் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. சாதாரணமான நூல் ஒன்றை இயற்றவேண்டும் என்று கருதி இருந்தால் இருந்த இடத்தில் இருந்தே அவர் பாடி இருக்கலாம், வெறும் பக்தி ஊட்டுவது மட்டுமே அவர். கருத்தாக இருந்திருப்பினும் இத்துணை முயற்சி தேவை இல்லை. ஒவ்வோர் அடியாரும் பிறந்த ஊருக்குச் சென்று, அவர் வாழ்ந்த இடத்தில் அவரைப் பற்றிக் கூறப்பெறும் கர்ணபரம்பரைச் செய்திகளையெல்லாம் அறிந்துள்ளார். சிலர் யாத்திரை செய்தார்கள். என்றால் அவர்கள் சென்ற வழியே தாமும் சென்றுள்ளார். சில ஊர்கள் அவர் காலத்திற்கு முன்பே அழிந்திருப்பினும், அவ்வூர்களின் பழைய பெயரையும் இருப்பிடத்தையும் முயன்று கண்டு எழுதியுள்ளார். ஒவ்வோர் ஊரின் இடத்தையும், அவ்வூர் அமைந்த எல்லையையும் நன்கு அறிந்துள்ளார். சிறிய ஊர்களைக் கூறும்பொழுதுகூட இன்ன நாட்டில் இன்ன கூற்றத்தில் அமைந்துள்ளது என்று கூறுகிறார். சேக்கிழார் புராண ஆசிரியர் கூறுகிறபடி சோழனுக்குச் சிவகதை சொல்லுவதே இவ்வாசிரியர் கருத்தாயின் இவ்வளவு முயற்சியும் தேவை இல்லை. தாம் கூறும் சரிதங்கள் சிறந்த சரித்திரமாகவும் திகழவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது - தமிழ்நாட்டின் சரித்திரம் இவ்வடியார்களின் வாழ்க் கையால் பெரிதும் பாதிக்கப்பட்டதை யாரும் மறுத்தல் இயலாது. எனவே, ஒரு நாட்டு மக்களின் மனநிலை மாறுவதற்குக் காரணமாக இருந்த அடியார்களின் சரிதத்தை மட்டும் கூறுவதானாலும் அது சரித்திர உண்மைகள் பொதிந்ததாக இருக்கவேண்டும் என்று கருதியே இவ்வளவு முயற்சிகள்ை மேற்கொண்டுள்ளார். இவ்வரலாறுகள் தமிழ் நாட்டின் சரித்திரத்தை மாற்றி அமைத்தன என்ற காரணத் திற்காக வெறும் சரித்திரமாக ஆக்கி இருந்தால், பெரிய புராணம் இன்று அனைவரும் படித்து மகிழும் காப்பியச் சரிதமாக அமையாடில் பள்ளிப் பிள்ளைகள் கற்கும் சரித்திர