பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தேசீய இலக்கியம் நூலாகமட்டும் அமைந்திருக்கும். சேக்கிழார் நுண்ணிய சரித்திர அறிவு பெற்றிருப்பினும் பிறப்பிலேயே கலைஞராகப் பிறந்தவர். அவருடைய நூல், நடந்ததைமட்டும் கூறும் சரிதமும் அன்று. ஏராளமான நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்திக் கூறி அலுப்புத் தட்டவைக்கும் சரித்திரமும் அன்று. ஒரு காப்பியக் கலைஞனைப் போலத் தம்முடைய நூலுக்கு ஒரு முழு வடிவமும் உறுப்புகளும் அமைத்துள்ளார். அக்காப்பியச் சரிதத்தின் குறிக்கோள், படிப்பவர் மனத்தைப் பக்திச் சுவையில் ஈடுபட வைப்பதுதான். இக்குறிக்கோள் எவ்வாறாயினும் நிறைவேறவேண்டும் என்பதற்காகப் பொய் புனைந்தவர் அல்லர் அவர். ஆனால், தம்முடைய சரிதத் தலைவர்கள் செய்த எண்ணற்ற செயல்களில் தம் நூலுக்கு இன்றியமையாதனவற்றைமட்டும் எடுத்துக்கொள்கிறார். முதலிலிருந்து இறுதி வரையில் தம்முடைய கடமை, சரிதம். சசரித்திரம் என்ற இரண்டிற்கும் இடையே அமைந்துள்ளதைச் சேக்கிழார் நன்கு அறிந்துள்ளார். சரித ஆசிரியனுக்குள்ள இடர்ப்பாடுகள் பல. அவற்றுள் ஒன்று எதைக் கூறுவது, எதை விடுவது என்பதாகும். சரித்திர ஆசிரியனுக்கு இந்தக் கவலை இல்லை. எல்லாவற் றையும் கூறுவதே அவனுடைய தொழிலாகும். ஆனால், இதே முறையைச் சரித ஆசிரியன் கடைப்பிடித்தால் நூலைப் படிப்போருக்கு அலுப்புத் தட்டும். சுவை மிகுந்த ஒரு வரலாறு கூறப் புகுந்து, சுவையற்ற பஞ்சாங்கம் எழுதிய குற்றம் ஆசிரியனைச் சேரும், இன்றேல், மற்றொன்று விரித்தல்' என்னும் குற்றம் வந்தடையும். இக்குற்றம் ஒரு சிறிதும் தம்மிடம் அணுகாமல் சேக்கிழார் நூல் இயற்றி புள்ளார் என்பதற்கு மேலே கூறிய இரண்டு உதாரணங்களே சான்றாகும். இம்மட்டோடு இல்லாமல் சில அழகுகளையும் செய்கிறார் ஆசிரியர். சரிதத் தலைவரின் செயல்கள் பலவற்றை ஆசிரியர் அறிதல் கூடும். ஆனால், எப்பொழுது எது நிகழ்ந்தது என்று அறிதல் கடினம். அந்தச் சந்தர்ப்