பக்கம்:தேடி வந்த குயில்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தேடிவந்த குயில்


வரை வாழ்ந்த பாரதிதாசன். பாரதியாரை-வெறுக்கவில்லை. . பெரியார் கொள்கையில் தீவிரம் ஏற்பட ஏற்பட அவருடைய பாரதிப் பற்றும் தீவிரமாகவே இருந்தது. ஏனெனில், பாரதி ஆத்திகராக இருந்தாலும், வேத புராணங்களை மதிப்பவராக இருந்தாலும், ஏற்றத் தாழ்வை யும் சாதிப்பாகுபாடு, மதப்பாகுபாடுகளையும் தொடக்க முதல் இறுதிவரை வெறுத்தொதுக்கி அவற்றை ஒழிக்கப் பாடுபட்டவராக இருந்தார். அவரே பார்ப்பன ஆதிக்கத்தைச் சாடிப் பாடியிருக்கிறார். ஆரியர் என்று தம்மையும், நாட்டையும் அழைத்துப் பெருமைப்பட்ட பாரதி ஆரியர்களின் வேர்க்கொள்கையான வருண பேதத்தை வன்மையாகச் சாடினார். மதப்பற்றும் பாரம்பரியப் பற்றும் அழுத்தமாகக் கொண்டிருந்த பாரதிஅந்தக் கொடுமைகளை மிக அழுத்தமாகக் கண்டிப்பவராக இருந்தார். - இத்தகைய காரணங்களால்தான் முற்றிலும் தன்மானக் கொள்கையுடையவரான பாரதிதாசன், பாரதியைத் தம் வழிகாட்டியாக இறுதிவரை கொண்டிருந்தார்! நடைமுறையில் பெரியார் கையாண்ட வழிமுறைகளில் முரண்பாடு ஏற்பட்டு ஒதுங்கிய காலத்திலும், பெரியாரின் தன்மானக் கொள்கையிலிருந்தும் நாத்திகக் கொள்கை யிலிருந்தும் இறுதிவரை பாரதிதாசன் பின்வாங்கவில்லை. மறைமலையடிகளின் சமயக் கொள்கைகளில் சற்றும் விருப்பில்லாத பாரதிதாசன், தனித்தமிழ்க் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டார். தாமே தனித்தமிழைப் பரப்பும் தொண்டராகி விட்டார்,