பக்கம்:தேடி வந்த குயில்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம்...திருவிளக்கு

15


தொடக்க காலத்தில் சுப்பிரமணியர் துதியமுது, கதர்ப் பாட்டு, காந்தி பாட்டு முதலிய பாடல்களை எழுதிக் குவித்த பாரதிதாசன். பெரியார் இயக்கத்தில் சேர்ந்த பிறகு, ஒரு பீரோ நிறைய இருந்த மேற்படி புத்தகங்களைத் தம் கையா லேயே நெருப்பிட்டுக் கொளுத்திவிட்டார் என்றால், பகுத் தறிவுக் கொள்கைகளில் அவருக்கிருந்த அழுத்தத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்த உறுதி-தன்மான பகுத்தறிவுக் கொள்கைகளில் அவர் வைத்த நம்பிக்கை இறுதிவரை சிறிதுகூடக் கலைய வில்லை. இதுதான் அவர் பெருமை!