பக்கம்:தேடி வந்த குயில்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன் கோனாபட்டு முருகு சுப்பிரமணியன் வீட்டில் பாரதி தாசன் ஏறத்தாழ ஒரு மாதம் தங்கியிருந்தார், சுற்றுப்புறங் களில் உள்ள ஊர்களுக்குச் சொற்பொழிவாற்றச் செல்வதும், பிறகு கோனாபட்டு வருவதும் தொடர் நிகழ்ச்சிகள். திருப்பத் தூர் காரைக்குடி கானாடுகாத்தான் இப்படிப் பல ஊர்களில் கூட்டங்களுக்குப் போய் வருவார். கோனாபட்டிலும் இடையிடையே சொற்பொழிவு நடை பெறும். ஒருநாள் பக்கத்து ஊர் ஒன்றிலிருந்து பாரதிதாசனைச் சொற்பொழிவுக்கு அழைக்க ஒருவர் வந்திருந்தார். கவிஞர் வர ஒப்புக் கொண்டார். கூட்டம் பற்றித் துண்டறிக்கை போட்டு நன்கு விளம்பரம் செய்யுமாறு கவிஞர் ஆணையிட் டார். வந்தவர் துண்டறிக்கை எழுதித் தரும்படி கவிஞரிடமே கேட்டார். அருகில் நான் இருந்தேன். 'இவனே, ஒரு தாள் எடுத்துவா; நான் சொல்கிறபடி எழுது என்றார் புரட்சிக் கலிஞர். நான் ஒரு தாள் எடுத்துவந்தேன். பேனாவைத் திறந்தேன். தாளின் உச்சிமையத்தில் “தமிழ் வாழ்க’ என்று எழுதினேன். “என்ன? உ சிவமயம் போடுகிறாயா?” என்றார் கவிஞர். 'இல்லை ஐயா, “தமிழ் வாழ்க’ எழுதினேன்”