பக்கம்:தேடி வந்த குயில்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

31


அதை வாங்கிக் கொண்டு கல்லுக்கட்டிக்குச் சென்றேன். கல்லுக்கட்டி காரைக்குடியின் மையப்பகுதி. இதுதான் கடைத் தெருவும்கூட கல்லுக்கட்டியின் ஒரு மூலையில் குதிரைவண்டி நிலையம் இருந்தது. அங்கு ஒரு குதிரை வண்டியை வாடகை பேசிக் கொண்டு இராம சுப்பையா வீட்டுக்கு வந்தேன். புரட்சிக் கவிஞர் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தார். வண்டிக்காரனுக்கு அருகில் முன்புறம் அவர் இருந்தார். நான் பின்புறம் அமர்ந்து கொண்டேன். இராம சுப்பையா வழியனுப்ப வண்டி புறப்பட்டது. காரைக்குடியில் வண்டி செல்லும் வழியெல்லாம், பின்னால் இருந்தபடி சில துண்டறிக்கைகளை எடுத்துத் தெருவில் வீசிஎறிவேன். வழியில் போவோர் வருவோர் அதை எடுத்துப் படிப்பார்கள். காரைக்குடியிலிருந்து ஆத்தங்குடி போகும் வழியில் ஒவ்வொரு கிராமத்திலும், துண்டறிக்கைகளை வீசிக்கொண்டு வந்தேன். ஒவ்வொரு ஊரிலும் வழியில் போவோர் வருவோர் அந்தத் துண்டறிக்கைகளை எடுத்துப் படிப்பார்கள். கழனிவாசல், பாதரக்குடி, துளாவூர், குன்றக்குடி, பலவான்குடி இப்படி ஒவ்வொரு ஊரிலும் துண்டறிக்கைகள் போட்டுக் கொண்டே வந்தேன். குன்றக்குடி மலையடிவாரத்தைக் கடக்கும்போது துண் டறிக்கைகளை வீசி எறிந்தேன். அவை காற்றில் வண்டிக்கு முன்புறமாகப் பறந்து சென்று சிதறி விழுந்தன. சிறுவர்களும் பெரியவர்களும் எடுத்துப் படித்தார்கள். புரட்சிக் கவிஞர் வண்டியை நிறுத்தச் சொன்னார். "ஏன்?" என்றேன்.