பக்கம்:தேடி வந்த குயில்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தேடிவந்த குயில்


'தம்பி, பாரதிதாசன் வந்திருக்கிறாராமே?” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தார். தியாகராசன் செட்டியார் ஆத்தங்குடியில் மிக முக்கிய மானவர். அப்போது ஒரு சிங்கம்போல் வாழ்ந்து வந்தார். வேட்டைக்குப் போவது குதிரைச் சவாரி செய்வது குதிரை வளர்ப்பது முரடர்களிடம் சரிக்குச் சரியாக நின்று சண்டை போடுவது. எப்பொழுதும் தன்னைச் சுற்றி ஒரு வீரர் கூட்டத்தை வைத்துக் கொண்டிருப்பது. இப்படி நகரத்தார் வழக்கத்திற்கு மாறான செல்வாக்குப் பெற்றவர். தியாகராசன் செட்டியார் என்று சொன்னால் திருடர்கள் ஒடி யொளிவார்கள். முரடர்கள் அடங்கி ஒடுங்கிப் போவார்கள். அவருடைய குதிரைச் சவுக்கு நியாயத்துக்குப் போராடும். வெற்றி தவிர அது வேறு ஒன்றைக் கண்டதில்லை. அப்படிப்பட்ட தியாகராசர் பாரதிதாசனைத் தேடி வந்தார். . கவியரசரும் தியாகராசரும் சிறிது நேரம் பேசிக் கொண் டிருந்தார்கள். .

தம்பி, ஐயாவை நான் எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இரவு சாப்பாடு எங்கள் வீட்டில். நீயும் வந்துவிடு” என்று கூறிக் கொண்டே எழுந்தார். பாவேந்தரும் அவருடன் கிளம்பி விட்டார்.

"கூட்டம் இருக்கிறதே' என்றேன் நான். "கூட்டத்திற்கு நான் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்றார் தியாகராசர்.