பக்கம்:தேடி வந்த குயில்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

35


எனக்குத் துணிச்சல் வந்தது. 'பாரதிதாசன் பேசும்போது யாரேனும் தகராறு செய் தால் என்ன செய்வது' என்று நான் பயந்து கொண்டிருந் தேன். இப்போது என் பயம் நீங்கிவிட்டது. தியாகராசரை எதிர்த்து ஊரில் யாரும் நிற்கமாட்டார்கள். அதனால் கூட்டம் அமைதியாக நடக்கும். இப்படி நான் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேன். ஆத்தங்குடிச் சிவன் கோயில் ஊருணிக் கரையில் காசி அய்யா வீட்டின் எதிரில் ஒரு கொடிக் கம்பம். அந்தக் கொடிக் கம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் மூவண்ணக் கொடி எப்பொழு தும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில்தான் காங்கிரசுக் கூட்டங்கள் நடைபெறும். அதே இடத்தில்-மூவண்ணக் கொடியின் கீழ் தான் நாங்கள் திராவிடர் கழகத் தொடக்க விழாவும் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். சரியாக 5-30 மணிக்கு தியாகராசர் பாவேந்தரைக் கூட்டிக் கொண்டு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆறுபேர், கோனாபட்டு மாணவர்கள் 4 பேர் ஆக மொத்தம் 10 பேர் கூட்டத்திற்கு). வந்திருந்தோம். மற்றவர்கள் வரவில்லை. கூட்டம் என்ன ஆகுமோ? எதிர்ப்பு ஏற்படுமோ என்று பயந்து பலர் வரவில்லை. புரட்சிக் கவிஞர் வந்தவுடன், தியாகராசர் கூட்டத்தைத் தொடங்கலாம் என்றார். நாங்கள் பத்துப் பேரும் நாற்காலியின் இருபுறத்திலும் கவிஞருக்குப்பின்புறமாக நின்று கொண்டிருந்தோம், "யாருமே இல்லை. யாரைப் பார்த்து நான் பேசுவது?" என்று கவிஞர் கேட்டார்.