பக்கம்:தேடி வந்த குயில்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தேடிவந்த குயில்


இவ்வாறு ஏழு தாட்கள் தியாகராசர் வீட்டில் தங்கி வேட்டைக்குச் செல்வதும் நல்ல விருந்து உண்பதுமாகக் கழித் தார் கவிஞர் பாரதிதாசன். ஒருநாள் நானும் கவிஞர் மு. அண்ணாமலையும் எழுதி முருகு சுப்பிரமணியம் அவர்கள் தமது திருமண தாளில் அச்சிட்டு வெளியிட்ட விருந்து என்ற தலைப்புள்ள சிறு கையடக்கப் பதிப்பைக் கவிஞரிடம் காட்டி வாழ்த்துமாறு வேண்டினோம். நூலை முற்றும் படித்துப் பார்த்த கவிஞர் அப்பொழுதே ஒருதாள் கொண்டு வரச் சொல்லி; எங்களுக்கு வாழ்த்து ஒன்று எழுதினார். ஆசுகவியாக அவர் எழுதிய அந்த உடனடிக் கவிதை இது தான். முருகு வள்ளி திருமண நினைவாய் அரிதின் இயன்ற விருந்தெனும் கவிதைநூல் கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேன்; என் எனின் தண்டமிழ் அன்னை தன்னை வாழ்த்தியும் பகலவன் வரவு பகர்ந்தும் மற்றவன் அகலும் அழகை அறைந்தும் தோழர் நாச்சியப்பர் நனிசிறக் கின்றார். தாமரைக் குமரியில் தனிச்சிறப் படைந்து மாமலர் வண்டின் வகையுரைத்தலில் இளங்கவி தானென இலகுகின்றார். 掌 辭 事 சிரித்த முல்லை விரித்த பண்பினால் பெருத்த காவிரி பேசிய பண்பினால் அன்னை நாட்டை அழகு செய்யுமோர்