பக்கம்:தேடி வந்த குயில்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தேடிவந்த குயில்


அருகில் செயலாளர்கள் சூழ்ந்துவர சிங்க நடையுடன் நிமிர்ந்து பார்த்தபடி மேடையை நோக்கி வந்து கொண் டிருந்த அந்தத் தோற்றப் பொலிவைக் கண்டபடி, மெய் மறந்து அமர்ந்திருந்தேன். பக்கத்தில் இருந்தவர்களனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ததைக் கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தேன். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த பாவேந்தர் கூட்டத்தின் பக்கமாகத் தன் பார்வையைத் திருப்பினார். மேடைக்குச் செல்லாமல் என்னை நோக்கி வந்தார். நான் எழுந்து நின்றேன். என்னை நெருங்கினார். 'அட இவனே! எப்பொழுது வந்தாய்?" புரட்சிக் கவிஞர் கேட்டார். பெயர் நினைவுக்கு வராதபோது அவர் விளிப்பது 'அட இவனே என்று தான். “ஒரு மாதமாகிறது அய்யா", "சிங்கப்பூருக்குத்தானே போயிருந்தாய்?" 'இல்லை. இரங்கூனுக்கு.” “சரி கூட்டம் முடிந்தவுடன் போய் விடாதே. என்னைப் பார்த்தபின் போகலாம். உன்னுடன் நிறையப் பேச வேண்டும்' புரட்சிக் கவிஞர் என்னை நன்றாக நினைவு வைத்திருக் கிறார். இந்த எண்ணமே இன்பப் பெருமிதத்தை யுண்டாக்கியது. கவியரங்கம் நடந்தது. புரட்சிக் கவிஞரின் முன்னுரை முடிப்புரை இலக்கிய முழக்கமாக ஒலித்தது. இளங்கவிஞர்களுக்குக் கவிதை பற்றிய தெளிவான விளக் கம் கிடைத்தது. தன்மான உணர்வும் பகுத்தறிவுக் கருத்தும் விளக்கத்தோடு விளக்கமாக எழுந்தன.