பக்கம்:தேடி வந்த குயில்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகப்பா கல்லூரியில்

43


கூட்டம் முடிந்ததும் புரட்சிக் கவிஞர் மேடையை விட்டு இறங்கி என்னிடம் வந்தார். தம்மோடு வந்து உணவருந்துமாறு பணித்தார். சுற்றிச் சூழ்ந்து வந்த விசிறிகளிடம் என்னைச் ‘சிறந்த கவிஞர்' என்று அறிமுகப்படுத்தினார். - நலம் விசாரித்தார். எட்டாண்டு பர்மா வாழ்க்கை பற்றி விவரம் கேட்டார். என்னைச் சந்தித்ததிலே அவர் தம் பாசவுணர்வு வெளிப் பட்டது. எனக்கோ தமிழ்நாட்டின் பெருந்தலைவர் கவிஞர், என்னை நினைவு வைத்துக் கொண்டு பேசுகின்றார் என்ற பெருமித உணர்வு நெஞ்சில் நிறைந்திருந்தது,