பக்கம்:தேடி வந்த குயில்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் பாரதிதாசன்

47


சிந்தனையில் ஆழ்ந்தார். 'ஒன்று செய். என்னோடு வா. நல்ல இலக்கிய நூல்களின் பட்டியல் ஒன்று தருகிறேன். அவற்றை வாங்கிக் கொண்டு போ. ஒய்வு நேரத்தில் அவற்றைப் படி, தமிழை மறக்காமல் இருக்கலாம்” என்று கூறித் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். தம்புச் செட்டித் தெருவில் ஒரு நண்பர்-இயக்கத் தோழர் வீட்டில் தங்கி யிருந்தார். - என்னை அழைத்துச் சென்று ஒரு தாள் கொடுத்துப் பட்டியல் எழுதச் சொன்னார். இருபது இலக்கிய நூல்களின் பட்டியல் அது, ‘'நீ தங்கியிருக்கும் பவழக்காரத் தெருவில், உங்கள் நகர விடுதிக்குப் பக்கத்திலேயே சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இருக்கிறது. அங்கே இந்த நூல்கள் கிடைக்கும். இருபது ரூபாய்க்குள்தான் இருக்கும். நான் அனுப்பியதாகச் சொல். ஏதேனும் கழிவு நீக்கித் தரலாம், வாங்கிச் சென்று பர்மாவில் ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்பப் படி. உன் கவிதை வளம் கூடும். தமிழ் மறவாமல் நிலைக்கும்’ என்று கூறினார். ஆத்தங்குடிக்கு வந்திருந்தபோது, தொடங்கிய திராவிடக் கழகக் கிளைக்கு நூலகம் வைக்கச் சொல்லி, பாவேந்தர் ஒரு கடிதம் கொடுத்தார். அவர் கடிதத்தைக் குடியரசு அலுவலகத்துக்கு அனுப்பியபோது அறுபது புத்தகங்களை அவர்கள் இருபது ரூபாய்க்கு அனுப்பி வைத்தார்கள். அவை அத்தனையும் தன்மான இயக்க நூல்கள், இப்போது பாவேந்தர் எழுதித்தந்த பட்டியலில் இருந்த நூல்கள் அத்தனையும் சமய இலக்கியங்கள். குற்றாலக் குறவஞ்சி, மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ். இப்படிப்பட்ட பல பிரபந்த நூல்கள்.