பக்கம்:தேடி வந்த குயில்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தேடிவந்த குயில்


'அய்யா, இவை யெல்லாம் சமய நூல்களாயிற்றே!” என்று கேட்டேன், "சமய நூல்கள் என்று ஒதுக்கிவிடாதே. நமக்கு தமிழ் இலக்கியம் என்று இப்போது இருப்பதெல்லாம் சமய நூல்களே! இவற்றைத் தான் நாம் படிக்க வேண்டியிருக்கிறது. பயில்வதற்கு நாம் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற பிறகு, நாம் நல்ல தன்மான இலக்கியங்களை சமயச் சார்பற்ற இலக்கியங் களைப் படைக்க வேண்டும், அதற்காகத்தான் நானும் நீயும் இருக்கிறோம்" என்று தெளிவு படுத்தினார் புரட்சிக் கவிஞர். அவர் விளக்கத்தைக் கேட்டபின் நான் தெளிவு பெற் றேன், நேரே பவழக்காரத் தெருவில் இருந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குச் சென்று அத்தனை நூல்களையும் வாங்கிக் கொண்டேன், அந்த நூல்கள் அத்தனையும் காலத் தால் அழியாத சிறந்த சிற்றிலக்கியங்கள். அவற்றைப் படித்ததன் பயனாகவே என்னுடைய தமிழ்நடை இனிமை யாக அமைந்தது, என் கவிதைகளில் இனிமை திகழ்வதற்குக் காரணம் அந்தத் தமிழ் நூல் பயிற்சியே! புரட்சிக் கவிஞர் என்னை நெறிப்படுத்தியவாறே நான் இன்று அறிவு இலக்கியங்களைப் படைத்து வருகிறேன்.