பக்கம்:தேடி வந்த குயில்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தேடிவந்த குயில்


பாரதியாரோடு நெருங்கிப் பழகியவராகவும், பாரதி யாருக்கு இணைவைத்துப் பேசக்கூடிய சிறப்புடையவராகவும், முப்பெரும் திராவிடத் தலைவர்களில் ஒருவராகவும் சிறந்து விளங்கிய புரட்சிக் கவிஞரோடு நான் பழக வாய்ப்புக் கிடைத்தது என்பது உண்மையில் பெருமைப்படக்கூடிய செய்தியேயாகும்.

எந்தத் தலைவரை நாம் பெருமையாக மதித்துப் போற்றுகிறோமோ அந்தத் தலைவர் நம்மை மதிக்கிறார் என்பதே சிறப்புத்தான்.

திருவள்ளுவர் அரசர்களோடு மற்றவர்கள் எப்படிப் பழக வேண்டும் என்று ஒரு குறளில் விளக்குகின்றார்.


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். திருக்குறள்

அக்காலத்தில் அரசர்களோடு பழகுவது போலத்தான் இக்காலத்துத் தலைவர்களோடு பழகுவதும் இருக்க வேண்டும்,

புரட்சிக் கவிஞரோடு நான் வள்ளுவர் கூறிய விதிப்படி தான் பழகினேன். நெருங்கியும் பழகவில்லை, விலகியும் இருக்கவில்லை.

இந்த நூலில், நான் அவரோடு எந்த அளவில் பழகினேனோ அந்த அளவு மட்டுமே செய்திகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். நான் அவரை எந்த அளவு அறிந்திருந்தேனோ அந்த அளவு மட்டுமே அவரை எடுத்துக் காட்டி யிருக்கிறேன். அவருடைய தகுதிகளை எந்த அளவு பெரிதாய் மதித்தேனோ, அவ்வளவு பெருஞ் சிறப்புக்களையும் எடுத்துக்காட்டியிருக்கிறேன்.

வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப்பின் தெற்கில் வந்தே
இடக்கினைச் செயநினைந்த
எதிரியை அந்நாள் தொட்டே