பக்கம்:தேடி வந்த குயில்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடிவந்த குயில்

65


அதற்கு அண்ணாமலை, "நான் நேரில் சொன்னால் அவர் என்னை விடமாட்டார். அவர் என்மேல் கொள்ளை அன்பு வைத்திருந்தார்’ என்று பதிலளித்தார். அவ்வளவு அன்பு வைத்திருந்தவரை விட்டு நீ ஏன் ஓடி வந்தாய்' என்று கேட்டார் முருகு.

"புரட்சிக் கவிஞர் வீட்டில் இருக்கும் போது, எப்போதும் விருந்துதான்! ஆனால், சிலசமயம் என்னைப் புதுவையில் விட்டுவிட்டு, அவர் மட்டும் வெளியூர் செல்லும் போதுதான் திண்டாட்டம்!

"அவர் வீட்டில் இல்லாதபோது குடும்பத்தில் எல்லா ருக்கும் அரைகுறைச் சாப்பாடுதான்! சில நாட்கள் எல்லாரும் பட்டினிதான்! என்னால் பட்டினி பொறுக்க முடியவில்லை. ஓடிவிந்து விட்டேன்’ என்றார் அண்ணாமலை. . இதே மு, அண்ணாமலை பின்னால் கோனாபட்டு முத்தையா செட்டியாரின் தத்துப் பிள்ளையாகி, வசதி வந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று, அங்கேயே ஆசிரியர் பணியில் சேர்ந்து விரிவுரையாளராகி சிதம்பரம் கனகசபை நகரில் வீடு வாங்கி வளர்ச்சியடைந்திருந்த காலம்.

1961ஆம் ஆண டில், கவிஞர் மு. அண்ணாமலை சென்னையில் முத்தையா அச்சகம்” என்ற பெயரில் அச்சகம் தொடங்கினார். செட்டிநாட்டு ராணி மெய்யம்மை ஆச்சி குத்துவிளக்கேற்றி வைக்க. ராஜாசர் முத்தையா செட்டியார் அவர்கள் புதுக்கணக்கு எழுதித் தொடங்கி வைத்த அச்சகம் அது. -

அப்போது நான் தென்றலில் பணியாற்றிக் கொண்டி ருந்தேன். ஒரு நாள் அண்ணாமலை என்னிடம் வந்தார்.