பக்கம்:தேடி வந்த குயில்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தேடிவந்த குயில்


"நான் சென்னையில் அச்சகம் தொடங்கி விட்டேன். பார்த்துக் கொள்ள ஓர் ஆள் வேண்டும். நீ வந்து பார்த்துக் கொள்வாய் என்ற எதிர்பார்ப்பில்தான் துணிந்து அச்சகம் வைத்தேன்' என்றார். நண்பருக்கு உதவுவோமே என்ற எண்ணத்தில் தென்றலை விட்டுவிட்டு முத்தையா அச்சகத்துக்கு வந்து பொறுப்பேற்றேன். ஒரு நாள் முத்தையா அச்சகத்தில் முன்னால் உள்ள அலுவலக அறையில் உட்கார்ந்து மெய்ப்புத் திருத்திக் கொண்டிருந்தேன். எதிரில் யார் வந்திருக்கிறார் என்று அறியாமல், ஓசை கேட்டும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து வரிகளைப் பார்த்த படியே திருத்திக் கொண்டிருந்தேன். "ஐயா, ஐயா" என்ற குரல் என் கவனத்தைத் திசை திருப்பியது. நிமிர்ந்து பார்க்கிறேன். நல்ல சிவப்பு-ஒல்லியான உடல், ஓர் இளைஞர். "புரட்சிக் கவிஞர் வந்திருக்கிறார்கள்." மின்விசையைத் தட்டியது போல் எழுந்து நிற்கிறேன். எதிரில் வெளிக் கதவுக்கு அப்பால் இமயம் நின்றதுபோல் பாவேந்தர் எழுந்தருளியிருக்கிறார். பாவேந்தரைக் காணுகின்றேன். என் கைகள் கூப்பு கின்றன. மெய் சிலிர்க்கிறது. என் அறையை விட்டு வெளியில் வருகிறேன். "ஐயா, உட்காருங்கள்." வேண்டுகின்றேன். பாவேந்தர் உள்ளே வருகிறார். இருக்கையில் அமர் கிறார்.