பக்கம்:தேடி வந்த குயில்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

5


          அடக்கடா என்றுரைத்த
              அறங்காக்கும் தமிழே! இங்குத்
           தடைக்கற்கள் உண்டென் றாலும்
                தடந்தோளுண் டெனச் சிரித்தாய்! 

இதுதான் புரட்சிக் கவிஞருடைய கொள்கை. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் அவரைப் பலப்பலவாறு அறிமுகப்படுத்துகிறார்கள்.

தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காக இன்று பலர் அவரைப் பலவாறு சித்தரிக்கிறார்கள். சிலர் ஆராய்ச்சி என்ற பெயரில்,

அவர் என்னென்ன தவறு செய்தார், எங்கெங்கே வழுக்கி விழுந்தார் என்பதையெல்லாம் நாள்வாரியாகப் பட்டிய லிட்டுக் காட்டி ஏதோ பெரும் புதையலைக் கண்டு விட்டவர் கள் போல் கூத்தடிக்கிறார்கள்.

இன்னும் சிலரோ, தாம் கேள்விப்பட்ட சில வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைக் கூட்டியும் குறைத் தும் தம்விருப்பம் போல் எழுதி ஏதோ பெரியசாதனையைப் புரிந்து விட்டதாகவும், பெரிய உண்மையைச் சொல்லி விட்ட தாகவும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

பெரியார். புரட்சிக் கவிஞர் போன்ற தன்மானத் தலைவர்களை-கடவுள் மறுப்பாளர்களை-அவர்கள் இறந்த பிறகு சிலர் பக்திமான்களாக காட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பெரியார் கடைசிவரை எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்தார். இதன் இரகசியம் தெரியுமோ? அவர் இரகசிய மாகத் தினந்தோறும் விநாயக பூசை செய்துவந்தார் என்று கூடவேயிருந்து பார்த்தது போல் சிலர் பேசுவார்கள். அதுபோலவே, பாரதிதாசன் எப்போதோ பாடிய கடவுள் பாடல்களை எடுத்துக் காட்டி அவரைப் பக்திமானாகக்