பக்கம்:தேடி வந்த குயில்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடிவந்த குயில்

73


தமிழ்க் கவிஞர் மன்றத்தைத் தொடர்ந்து செயலாள ராக இருந்து நடத்தி வரும் பொன்னடியானை எவ்வாறு போற்றினாலும் தகும். இன்பத்திலும் துன்பத்திலும் பாவேந்தரோடு இருந்து- இறுதி வரை அவர் ஊழியராகப் பணி புரிந்து, இன்றும் அவர் பெருமையை நெஞ்சில் தாங்கி நிலைநிறுத்தி வரும் பொன்னடியான் போற்றப்பட வேண்டியவர்.

இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்க் கவிஞர் மன்றத்தை நடத்தியும்-சற்றும் தளர்வுறாதுஇன்றும் முன்போலவே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இளமைப் பொலிவுடனும் மன்றத்தை நடத்தி வருவது கண்டு நான் வியப்படைகிறேன்.

கடற்கரைக் கவியரங்கம் இளங் கவிஞர்களின் அரங் கேற்ற மேடையாகத் திகழுகிறது. அவர் நடத்தி வரும் முல்லைச் சரம் ஏடு கவிஞர்களின் கருத்துப் பெட்டகமாகத் திகழுகிறது, பாவேந்தரின் குயில் செய்த பணியை முல்லைச் சரம் தொடர்த்து செய்து வருகிறது.

1947-ல் சென்னை அலுவலகம் வந்த போது என்னைக் கண்ட பாவேந்தர், என்னைப் போல் ஒரு தொண்டனின் உதவி தனக்குத் தேவை என்று எண்ணினார். நான் அவருடைய அணுக்கத் தொண்டனாக இருக்கவில்லை. அவர் விரும்பிய தொண்டனாக பொன்னடியான் விளங்கி னார். தன் பணியைச் செம்மையாகச் செய்தார். இன்றும் செய்து வருகிறார். அவர் மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். பா-5