பக்கம்:தேடி வந்த குயில்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதாத வரிகள்

75


இருட்டறையில் உள்ளதடா உலகம்-சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!

என்று குமுறும் எரிமலையும் புரட்சிக் கவிஞர் உள்ளம் தான்!

இப்படி வீறுடன் புரட்சிக் கவிஞர் பாடல்களை எழுதி னார். புரட்சிக் கவிஞர் எழுதிய சில பாடல்களை அந்தக் காலத்துத்தமிழ் இதழ்கள் பாரதியார் எழுதியதாக வெளியிட் டிருக்கின்றன. பின்னால் புரட்சிக் கவிஞர் எழுதாத சில பாடல் வரிகள் அவர் பாடல்களாக நாடு முழுவதும் வழங்கப் பட்டன.

நாடு விடுதலையை நோக்கி நடைபோட்டுக் கொண் டிருந்த அந்தக் காலத்தில் இளைஞர்கள் துடிப்பும் வீரமும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.

புரட்சிக் கவிஞரின் பாடல்கள் வீறுசான்ற அவர்கள் உள்ளத்துக்கு நல்ல தீனியாகப் பயன்பட்டன. துடிக்கும் அந்த உள்ளங்களிலிருந்து வெடித்துக் கிளம்பிய வீரவரிகள் அவர் பெயராலேயே நாடு முழுவதும் வழங்கப்பட்டன. எந்த நூலிலும், எந்த நாளிதழ் மாத இதழ் வார இதழிலும் யார் பெயராலும் வெளிவராத அந்த வரிகள் எப்படி நாடெங்கும் பரவின என்பதுதான் விந்தை!

புரட்சிக் கவிஞரையே சில ஆராய்ச்சிக்காரர்கள், இந்த வரிகளை எந்த நூலிலே எந்த இடத்திலே கையாண்டிருக் கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

தேடித் தேடிப்பார்த்துவிட்டு, எழுதியவரையே கேட்டு விடலாமே என்று நேரில் வந்து கேட்டார்கள்.

அதற்குப் புரட்சிக் கவிஞர் இவை நான் எழுதியவையல்ல என்று விடையளித்தார்கள்.

அப்படியானால் இவை யார் எழுதியவை?

எனக்குத் தெரியாது.