பக்கம்:தேடி வந்த குயில்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தேடிவந்த குயில்


காட்டுவார்கள். இப்படி எல்லாம் கடவுள் கட்சியை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் கடவுள் இருப்பது பரிதாபமானதே!

சிலர் அவர் தொடக்கத்தில் எழுதிய காந்திப்பாட்டு கதர்ப்பாட்டு போன்றவற்றை எடுத்துக் காட்டி அவரை ஒரு தேசீய வாதியாகச் சித்தரிப்பார்கள்.

பாரதிதாசன் தன்மான இயக்கத்தில் சேர்ந்த பிறகு ஏற்கெனவே தாம்பாடிய சுப்பிரமணியர் துதியமுது, காந்திப் பாட்டு, கதர்ப்பாட்டு போன்ற தம்மிடம் மிஞ்சியிருந்த சிறு சிறு வெளியீடுகளையெல்லாம் வீதியில் எடுத்துப் போட்டுக் கொளுத்தி விட்டார்.

இதுபோன்ற பித்தலாட்டங்கள் நடக்கும் என்று அறிந்து தான் பெரியார், தம் சிலை வைப்பவர்களை அதன் கீழே கடவுள் மறுப்பு வாசகங்கள் எழுதிப்பதிக்குமாறு கட்டளை யிட்டார்.

மறைந்தவர்கள், எந்த இலட்சியத்திற்காக வாழ்ந்தார் களோ, அந்த இலட்சியங்களை வளர்ப்பதுதான், அவர் களுக்குப்பின் நாம் செய்ய வேண்டிய மரியாதையாகும். அதை விட்டு அந்த இலட்சியங்களைக் கைவிட்டு விட்டு அவர்களுக்கு விழாக்கொண்டாடுவதும், சிலைகளுக்கு மாலை போடுவதும், அவர்களைப் பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறுவதும் தவறான செயல்கள் ஆகும்,

இவர்களைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரட்சிக் கவிஞரே கூறியிருக்கிறார்.

            ஆளுவோர்க் காட்பட் டேனும்
                அரசியல் தலைமை கொள்ள 
            நாளுமே முயன்றார் தீயோர்
                தமிழே! நீ நடுங்கவில்லை!