பக்கம்:தேடி வந்த குயில்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தேடிவந்த குயில்


வண்ணத்துக் கவிபாடத் தெய்வ சக்தி வளமிருக்க வேண்டுமெனும் பார திக்கு விண்ணளவு கற்பனையை நாத்தி கத்தால் விரித்துரைக்கும் புலவனொரு தாச னாமோ? பாரதியார் தெய்வீகம் போற்றி னாலும் பழமையிலே வெறுப்பு டையார்; நாடுகாக்க வீரர்களே வேண்டுமெனும் புரட்சி நோக்கர் வெறும்பஜனைக் கூட்டத்தை வெறுக்கும் சீலர் தேரெனினும் விரைந்தோட வேண்டு மென்னும் சிந்தனையில் ஞானத்தேர் உலாவந் தாராம் யாரிவரென் றறிந்தேதான் தாச னானார் அரட்டுகின்ற பார்வையுள்ள புரட்சி வேந்தர். வில்லாளி அருச்சுனனைப் பார திக்கு மிகப்பிடிக்கும் உயர்வீரன் என்பதாலே சொல்லாலும் செயலாலும் வாய்மை காத்துத் தோற்றாலும் பணியாத நெஞ்சங் கொண்ட வல்லானாம் இராவணனைப் பாவேந்தர் தம் வழிமுதல்வன் எனவீர வணக்கம் செய்வார் வல்லாண்மை மிக்க இரு கவிஞர் கட்கும் பகைமுடிக்கும் வீரரையே மிகப் பிடிக்கும். புதுக்கருத்தின் விடிவெள்ளி பார திக்குப் பொற்கதிராய்ப் பின்தோன்றும் தாசன் ஆவான் எதிர்க்கின்ற வீரத்தால் பழமை சாடி எழுச்சிமிகும் உலகத்தைப் படைக்கும் போக்கில் நதிமூலம் பாரதியாம் கடலிற் கூடும் காவிரியாம் தாசனிவன் என்ன லாகும் குதிகொள்ளும் புதுக்கருத்தை ஏற்று நிற்கும் கொள்கைக்கிவ் விருவருமே தலைமை யாகும்! -காச்சியப்பன் பாடல்கள் : தொகுதி 11.