பக்கம்:தேடி வந்த குயில்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7



முன்னுரை

புரட்சிக் கவிஞர் தொடக்கத்தில் கடவுள் பக்தராகவும், காந்தியவாதியாகவும், இருந்தார் என்றால், பிற்காலத்தில் அவர் பெரியாருடைய தன்மான இயக்கத்தில் சேர்ந்த பிறகு, நாத்திகராகவும், திராவிட நாட்டு உரிமைக்காகப் பாடு படுபவராகவும் இந்தி எதிர்ப்பாளராகவும் மாறிவிட்டடார்.

இறுதிவரை அவர் இந்தக் கொள்கைக்காரராகவே வாழ்ந்தார்.

தந்தை பெரியாரோடு முரண்பட்டு நின்ற காலங்களில் கூட அவர் தன்மானக் கொள்கையில் உறுதியோடு நின்றார்.

வடவர் ஆதிக்கம் பார்ப்பனர் ஆதிக்கம் இந்தி ஆதிக்கம் இவை தமிழரை அடிமைப்படுத்த வந்தவை என்பதில் சிறிதும் அசைக்க முடியாத கருத்துக் கொண்டிருந்தார்.

தமிழ்நாடு தனிஉரிமை பெற்றால் தான் தமிழர்க்கு வாழ்வு உண்டு என்பதும்

தமிழ் மொழி வேற்றுமொழிக் கலப்பின்றி தனித் தமிழாகக் கையாளப் பெற்றால்தான் மொழிவளம் கூடும் என்பதும்

சாதி, மதம், வருண பேதம்,வேதம், சாஸ்திரம், புராணம் இதிகாசம் இவை யொழியும் நாளே தமிழர் வாழ்வு சிறக்கும் நாள் என்பதும்

பாவேந்தர் பாரதிதாசனுடைய அசைக்க முடியாத தன் மானக்கொள்கைகள்.

இதற்கு மாறாக அவரைச் சித்திரித்துக் காட்டுவோரி பித்தலாட்டக்காரர்கள் . தமிழ் மொழி, தமிழ்நாடு தமிழ் இனம் பற்றிய அவருடைய அசைச்க முடியாத கொள்கைகளுக்கு இன்றும் நல்ல சான்றாக நின்று நிலவுவது தமிழியக்கம் என்னும் அரிய நூலாகும்.

பாவேந்தர் பாரதிதாசனின் உண்மையான உருவத்தை "தமிழியக்கம் நூலிலே நன்றாகக் காண முடியும்.