பக்கம்:தேனலைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் என்று முரசு உறுமுகின்ற களம் நோக்கி, வாள் தூக்கிப் பாய்கின்ற காதலனைத் தடுத்து நின்றாள். " விடுதலைக்குத் தாவுகின்ற என்னை உந்தன் காதலுக்குக் காவு கொடுக்க எண்ணாதே பெண்ணே ! கெடுதலைக்கு ஆளாகிக் கீழோரால் சீழ் என்று இகழப்பட்ட எந்தன் செந்தமிழர் திரு நாட்டை வாழ்விக்க எழுந்திருக்கும் அணி வகுப்பில் நிற்பேன்-மணிமாடம், கனிப்பேச்சு, வேண்டேன் என்றான். 66 66 99 முற்றிலுமே வெறுத்தீரோ ? " என்றாள். 'பற்றில்லை உன் மீது என்றுரைக்க மாட் டேன்-பாம்புப் புற்றில்லை தென்தமிழர் தோட் டத்தில் என்ற நிலை வரும் வரையில் — கற்றிட முடியாதடி காதல் படிப்பு" என்றான் ; அவள் துடித்து நின்றாள். 86 - - இருவருமே போர்க் களத்தில் இணைந்து நிற்போம் - அணைந்து விட்டாலும் அப்படியே ஆகட்டும் இருவருக்கும் ; இதற்கென்ன பதில் அத்தான் ? 66 இஃதோர் முறை காதலர்கள் கடைப்பிடிப்ப துண்டு! ஆயின் எனக்கது சரிப்பட்டு வராது தங்கம் ! களம் புகுந்து வரும் பகையைச் சாடு கின்ற நேரம் – என் உளம் புகுந்த நேரிழையா ளுக்கு யாது நேர்ந்ததோ என ஒருக் கணம் - 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/32&oldid=1687382" இலிருந்து மீள்விக்கப்பட்டது