பக்கம்:தேன்மழை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னியும் தென்னையும் பத்து வயதோ பாவாடைப் பருவம் பதினைந்து வயதோ பூவாடைப் பருவம். பூத்து மலர்ந்த பொன்னி என்பவள் பத்தும் ஐந்தும் தொத்திய வயதினள். அந்த மங்கையோ அழகு சண்பகம்! அந்தி நிலவுக் கறிமும் அவள்முகம்! சிறிது கற்றவள் செந்நிறம் பெற்றவள். அன்னவள் ஒருநாள் அந்தி மாலையில் வீட்டை விட்டு வெளிபுறம் வருகையில் கூந்தல் ஏந்திய குளிரிளந் தென்னையின் தனிக்காய் ஒன்றவள் தலையில் வீழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/174&oldid=926755" இலிருந்து மீள்விக்கப்பட்டது