பக்கம்:தேன் சிட்டு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருங்கைமர வேதாளம்

27


யிருக்கின்றன. ஒரு முனிவருடைய வேண்டுகோளின் படி விக்கிரமாதித்தன் முருங்கை மரமொன்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த அந்த வேதாளத்தைக் கட்டித் தூக்கிக்கொண்டு வருவானாம். வேதாளம் ஒரு சிக்கலான புதிர்க்கதையொன்றைச் சொல்லி அதை விடுவிக்கும்படி அவனிடம் கேட்குமாம். அவன் தகுந்த விடை கூறுவதைக் கேட்டுக் கொண்டே அந்த வேதாளம் எப்படியோ தந்திரமாகக் கட்டவிழ்த்துக்கொண்டு ஒடிப் போய் முன்னிருந்தவாறே முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளுமாம். இந்தக் கதையிலிருந்துதான், "பழையபடி வேதாளம் முருக்கமர மேறிக் கொண்டது” என்ற வாக்கியம் தோன்றியிருக்கிறது. பொதுவாக அனைவருக்கும் ஒவ்வாத ஏதாவதொரு எண்ணத்தையோ செயலையோ மறுபடியும் மறு படியும் விடாது கடைப்பிடிக்கிறவனைப் பார்த்து அப்படிச் சொல்வதுண்டு.

விக்கிரமாதித்தன் பிடித்துவர முயன்ற வேதா ளத்தைப் போல எத்தனையோ வேதாளங்கள் இன்றும் இருக்கின்றன. மனிதன் அவற்றைக் கட்டிப் பிடித்து அடக்க எவ்வளவு முயன்றாலும், கொஞ்சம் ஏமாந்தால் அவை தப்பித்துக்கொண்டு போய் விடும்; பழையபடி முருக்க மரம் ஏறிக்கொள்ளும்.

இந்த வேதாளங்கள் வேறெங்குமில்லை. மனித னுடைய உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்றன. மனிதன் தன்னுடைய நல்லுணர்வினாலே அவற்றைக் கட்டிப்பிடித்து அடக்கி ஆள முயல்கிறான்; ஆனால் அவனுடைய பிடி பல சமயங்களில் தளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/28&oldid=1142478" இலிருந்து மீள்விக்கப்பட்டது