பக்கம்:தேன் சிட்டு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லி வாழ்க்கை

61


உன்னதக் காட்சியைத்தான் ஒவியன் தீட்டியிருக் கிறான்.

நேற்றிரவு மேஜையருகில் அமர்ந்து சிறுகதைத் தொகுதியொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளம் கதைகளிலே ஊன்றவில்லை; குறி யொன்றுமின்றி எங்கேயோ அலைந்தது.

புத்தர் படத்திற்குப் பின்னால் பதுங்கியிருந்த பல்லியொன்று திடீரென்று வெளிப்பட்டுச் சுவரிலே ஒட்டிய ஒரு பூச்சியைப் பிடித்துக்கொண்டு ஓடி மறைந்தது. என்னுடைய கவனம் அதன்மேல் சென்றது. அதே கணத்தில் உள்ளத்திலே கோபம் குமுறியது.

அன்புருவமான அந்த மகானின் நிழலை இந்த அற்பப் பல்லி எப்படிப் பயன்படுத்துகிறது பார்த்தீர்களா? அதற்கு எத்தனை கொழுப்பு, எத்தனை தந்திரம், எத்தனை வஞ்சனை அதனுடைய கொலைத் தொழிலுக்கு அந்தப் புனிதனையா பதுங்கிடமாகக் கொள்ளுவது? உயிர்ப் பலியை விலக்கச் செல்லும் அந்த அஹிம்சாமூர்த்தியின் பின்னலிருந்தா இப்படி உயிரை வாங்குவது? நினைக்க நினைக்க எனக்கு அந்தப் பல்லியின்மேல் ஆத்திரம் பொங்கிற்று. அதை ஒரே அடியில் அடித்து நொறுக்க வேண்டுமென்று துடித் துக்கொண்டு எழுந்தேன்.

ஐயன் புத்தனின் வதனத்திலே தவழ்ந்த சாந்திமயமான புன்னகை அப்பொழுதும் மாறவில்லை. அவர் என்னைப் பார்த்து ஏதோ சற்று ஏளனமாகச் சிரிப்பது போலவும் எனக்குப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/62&oldid=1155023" இலிருந்து மீள்விக்கப்பட்டது