பக்கம்:தேவநேயம் 1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 தேவநேயம் அக்கம் உறுமி, கஞ்சுரா (கிஞ்சிரி), கிறி, குடுகுடுப்பை (குடுகுடுக்கை ), சல்லரி, சல்லிகை, சாலர், சிங்கி, தகுணிச்சம், தம்புர், பறை, மதங்கம் (மிருதங்கம்) முதலிய இசைக் கருவிப் பெயர்களும், அகவு, கனை, குரை, பிளிறு முதலிய கத்து வினைச்சொற்களும் ஒலிக்குறிப்பை யடியாகக் கொண்டு பிறந்தவையே. சில அஃறிணை யொலிக்குறிப்புக்களும் சொற்களும் கடுமை அல்லது இழிவுபற்றி மக்கள் செயலையுங் குறிக்க வரும். எ-டு: சள்ளெனல் = நாய்போல் சினத்தல். சீறுதல் = அராப்போற் சினத்தல், அழை, விளி முதலிய பல ஒலிவினைச்சொற்கள் ஒலிக்குறிப் படியினவாகத் தோன்றாவிடினும், உண்மையில் ஒலிக்குறிப்படி யினவே. எண்ணிறந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் வழக்கற்று மறைந்தன. (மு. தா.) அக்கம்" - அர்க்க அஃகல் = சிறிதாதல் (திவா.) அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுண்ணிதாதல். அஃகு = அஃகம் = அக்கம் = 1/12 காசு. காசு என்பது பழங்காலத்தில் ஒரு சிறு செப்புக்காசாயிருந்ததாகத் தெரிகின்றது. நெஞ்சே யுனையோர் காசா மதியேன் (தாயு. உடல்பொய். 72 ஒரு காசிற் பன்னிலொரு பங்கு மதிப்புள்ளது மிகச் சிறிதா யிருந்திருக்குமாதலின், அக்கம் எனப் பெயர்பெற்றது. அர்க்க (arka) என்னும் வடசொற்குச் செம்பு (copper) என்றே மானியர் வில்லியம்சு வடமொழி யாங்கில அகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ள து. ஆயின், செ. ப. க. க. த. அகர முதலியில், அது அக்கம் என்னும் தென்சொற்கு மூலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அக்கம் - அக்ஷ அல் - அள் = கூர்மை (திவா) அல்-அல்கு, அல்குதல் = சுருங்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = 1. குறுகுதல் (நன். 60), 2, சுருங்குதல், கற்பக் கழிமட மஃகும் நான்மணி. 29) 3. குவிதல். ஆம்பல்..........மீட்டஃகுதலும் (காஞ்சிப்பு, திருக்கண். 104)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/153&oldid=1431641" இலிருந்து மீள்விக்கப்பட்டது