பக்கம்:தேவநேயம் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176) தேவநேயம் அந்தி சவை - சபை - வ. ஸபா (Sabha). சமர், சமை, சமையம் என்னுஞ் சொற்கள் போன்றே, சவை யென்னுஞ் சொல்லும் சகர மெய்யொடு கூடிய அகரமுதற் சொல்லாகும். வடமொழியாளர் ஸபா என்னுஞ் சொல்லை ஸ + பா (bha) என்று பிரித்து, ஒளியொடு (பிரகாசத்தொடு) கூடியது என்று பொருட் கரணியங் காட்டுவர். காலஞ்சென்ற சு.கு. சட்டர்சி அதை மறுத்து, Sib என்னும் தியூத்தானிய அல்லது செருமானியச் சொல்லினின்று ஸபா என்னும் சொல் திரிந்ததாகக் கூறினார். ஆயின், Sib என்பது உடன்பிறந்தாருள் ஒருவரைக் குறிக்குஞ் சொல்லாதலால், அது பொருந்தாது. ஆகவே, அவை என்பதை மூலச் சொல்லாகக் கொள்வதே பொருத்தமாம். அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம் (முதனிலைத் தொழிலாகு பெயர்), அமை - அவை - சவை - சபை, உம் என்னுஞ்சொல் உந்து எனத் திரியுமென்று தொல்காப்பியங் கூறுகின்றது. உம் உந்தாகும் இடனுமா ருண்டே (தொல். இடை. 44). புறநானூற்றில் 24, 137, 339, 343, 352, 367, 384, 386, 395, 396 என்ற எண்கொண்ட பாட்டுக்களில், செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் செய்யுந்து என்னும் வாய்பாட்டுச் சொல்லாகத் திரிந்துள்ளது. தொல்காப்பியம் உம் என்னுஞ் சொல்லைப் பெயரெச்ச வீறென்று விதந்து குறியாது பொதுப்படக் கூறியிருப்பதால், உம் என்னும் இணைப்பிடைச் சொல்லும் உந்தெனத் திரியுமென்று கொள்ள இடமுண்டு. உம் என்னுஞ்சொல் அம் என்று திரிந்தது போன்றே, உந்து என்னுஞ் சொல்லும் அந்து என்று திரிதல் வேண்டும். உம் என்னும் கூட்டிணைப்புச் சொல்லை யொத்த and என்னும் ஆங்கிலச் சொல், அந்து என்னுஞ் சொல்லை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. “AND, Copulative Conjunction. (E.) common from the earliest times.AS. and, also written ond; by form, and. O.Fries, ande, and an; end, en: Du. en; Feel.nda, 0.H.G. anti, enti, Inti, unti; mod.G.ut' என்று கீற்று (Skeat) தம் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில் வரைந் திருத்தல் காண்க, உந்து என்னும் வடிவும் செருமானியத்தில் வழங்குதலை நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/193&oldid=1431689" இலிருந்து மீள்விக்கப்பட்டது