பக்கம்:தேவநேயம் 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தி பாவாணர் 177 அம் என்பதன் திரிபான அமல், அமர், அமை என்னும் ஏனைச் சொற்கள் போன்றே, அந்து என்னும் சொல்லும் கூடுதற் பொருள் கொள்ளும். அந்துதல் - கூடுதல், கலத்தல், மயங்குதல், இப் பொருளில் இச் சொல் வழக்கற்றது. இப் பொருளில் வழங்கிய இலக்கியமும் இறந்துபட்டது. அந்து - அந்தி = பகலும் இரவும் கலக்கும் (மயங்கும்) வேளை, பகலும் இரவும் கலத்தல் காலையும் மாலையும் நிகழ்வதால், முதற்காலத்தில் அந்தி யென்னுஞ் சொல் காலை மாலை யிரண்டிற்கும் பொதுவாகவே வழங்கிற்று, "காலையந்தியும் மாலையந்தியும்" என்னும் புறநானூற்றடியையும் (34:8), "காலை யாகிய அந்திப் பொழுதும் மாலையாகிய அந்திப் பொழுதும்” என்னும் அதன் உரையையும், நோக்குக. அந்திக்காலை, அந்தி மாலை என்றும் வழக்கிருந்தது. "அந்திமாலைச் சிறப்புச் செய் காதை” (சிலப். 4). பின்னர், இம் மயக்கத்தை நீக்க, காலையந்தியை வெள்ளந்தி யென்றும், மாலையந்தியைச் செவ்வந்தியென்றும் அடைகொடுத்து வழங்கினர். | வேலைக்காரப் பிள்ளை வெள்ளந்தி நேரத்திலேயே எழுந்து வேலை தொடங்க வேண்டும் என்று, இன்றும் பெருமனைக் கிழத்தியர் கூறுதல் காண்க. செவ்வந்தி நேரத்திற் பூக்கும் பூ செவ்வந்தியென்றே பெயர் பெற்றது. அப்பெயர் கன்னடத்தில் சேவந்தியென்றும், தெலுங்கிற் சேமந்தியென்றும், வடமொழியில் சேவதீயென்றும், கொச்சை வழக்கிற் சாமந்தியென்றும் திரியும், கொச்சை வழக்குச் சொல்லை ஒரு புலவர் சா + மந்தி யென்று பிரித்துச் செத்த குரங்கு என்று பொருள் கொண்டு, "செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே” என்று பாட்டும் பாடிவிட்டார். அமர், அமை, அமையம் என்னும் சொற்கள் போன்றே, அந்து என்னுஞ் சொல்லும் சகரம் பெற்றுச் சந்து என்றாயிற்று. சந்து = 1. பொருத்து; மூட்டு. (பிங்.), சந்துசந்தாகப் பிய்த்துவிட் டான். 2. இருதொடைச் சந்தான இடுப்பு. 3. பலவழி கூடுமிடம். “சந்துநீவி” (மலைபடு, 393), 4. மாறுபட்ட இருவரை ஒன்று சேர்ப்பு. "உயிரனையாய் சந்துபட வுரைத்தரு ளென்றான்” (பாரத. கிருட்டிணன் தூ. 6) 5. தக்க (பொருந்திய) சமையம். ம.க., து. சந்து . சந்துக்கட்டு = நெருக்கடி நிலைமை. ம., க., தெ. சந்துக்கட்டு, சந்துக்காறை = ஒருவகைக் கைவளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/194&oldid=1431690" இலிருந்து மீள்விக்கப்பட்டது