பக்கம்:தேவநேயம் 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் அமரகம் = போர்க்க ளம். அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா (குறள் 814) அமர் - சமர் - சமரம். சமம் = ஒப்பு, போர், ஒ.நோ, பொருதல் = ஒத்தல், போர்புரிதல், ஒத்தல் ஈண்டுக் கலத்தல், ஒளிறுவாட் பொருப்ப னுடல்சமத் திறுத்த (பரிபா. 22.1 அமர்க்க ளம் = போர்க்க ளம், ஆரவாரம், M. amarkkalam. அம்முதல் = 3. அமுங்குதல், பதுங்குதல். அம் - அம்மி. M. ammi = அமுங்க நெருக்கியரைக்குங் கல், அம்முக்கள்ளன் = ஒன்றும் தெரியாதவன்போல் நடிக்குந் திருடன், அமர்தல் = 11. அமுங்க நெருங்கித் தழுவுதல். அமரப் புல்லும் (திருக்கோவை, 372 அம்மு - அமுங்கு - அமுக்கு - அமுக்கி = இரவில் அமுக்குவது போன்ற தோற்றம் (Nightmare) அமுக்கடி - நெருக்கடி. அமுக்கன் = மறைவாக வினைசெய்பவன், M.amun}n}uka(அமுங்ங்க ) amukkuka. அமுக்கலான் = சிலந்தியை அமுக்கி நலமாக்கும் தழை. அமுக்கம் - கமுக்கம். அம் - அமிழ், அமிழ்தல் = நீரில் அமுங்குதல், M. amiluka (அமிழுக). அமிழ் - ஆழ் - ஆழம். ஆழ் - ஆழி. அமிழ் - அமிழ்த்து - ஆழ்த்து - M. amilttuka (அமிழ்த்துக) ஆம் - அழுந்து - அழுத்து - அழுத்தம், அழுத்து - அழுத்தி, அம் - அமை அமைதல் = (la) நெருங்குதல், கூடுதல், அமை - அவை = கூட்டம். கழகம், ம - வ, போலி. ஒ.நோ. அம்மை - அவ்வை , குமி - குவி. அமை, அவை என்பன முதனிலைத் தொழிலாகுபெயர், இமை, சுவை, என்பன முதனிலைத்தொழிலாகு பெயராயிருத் தலை நோக்குக. அவை - அவையம் - பேரவை. 'அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ, மதி - மதியம் (முழுமதி), நிலை - நிலையம், விளக்கு - விளக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/202&oldid=1431699" இலிருந்து மீள்விக்கப்பட்டது