பக்கம்:தேவநேயம் 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அமைச்சன் பாவாணர் அமிழ்து அவிழ் - அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு. மருமம் - மம்மம் - அம்மம் - அம்முது - அமுது = பால். பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும், சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி அமிழ்து என்னும் வடிவம் கொள்ளும். அமுது - அமுதம் - அம்ருத (வ.). வடமொழியாளர் அம்ருத என்னும் வடசொல் வடிவை அ + ம்ருத என்று தவறாகப் பகுத்து சாவைத் தவிர்ப்பது என்று பொருள் புணர்த்து. தேவரும் (சுரரும்) அசுரரும் திருப்பாற் கடலைக் கடைந்தெடுத்த சுரையைத் தேவர் உண்டதனால் சுரர் எனப்பட்டார் என்றும் அச்சுரை சாவைத் தவிர்த்ததனால் அம்ருத எனப்பெயர் பெற்றதென்றும் கதை கட்டிவிட்டனர். அதைக் குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர் விண்ணுலகப் பொருளெல்லாம் மண்ணுலகப் பொருளினும் மிகச்சிறந்தவை என்னும் பொதுக் கருத்துப் பற்றி, தலை சிறந்த இன்சுவையுண்டியை அமிழ்து என்றும் அமிழ்தினும் இனியது என்றும் சொல்லத் தலைப்பட்டனர். அம்ருத என்னும் வடசொல் வடிவம் கிரேக்கத்தில் Ambrotos என்றும் ஆங்கிலத்தில் Ambrotia என்றும் திரியும். (தி.மயின்) அமைச்சன் அமைச்சன் - அமாத்ய (வ.) அமை - அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை + சு = அமைச்சு (தொ, பெ.), ஒ.நோ, விழை - விழைச்சு, வடவர் காட்டும் வரலாறு : அம் = இது (அ.வே.). அமா (அம என்பதன் கருவி வேற்.) = உடன் (இ.வே). அமாத் (நீக்க வேற்.) = அண்மையிலிருந்து (இ.வே). அமாத்ய = உடன் வதிவோன், உடன் குடும்பத்தான் (இ.வே), 2. (அரசனின்) உடன் கூட்டாளி, அமைச்சன் (ம.பா), உடன் கூட்டாளி என்பது உழையன் என்பதற்கு ஒத்திருப்பினும், அம என்னும் அண்மைச் சுட்டுப் பெயரினின்று அமாத்ய என்னுஞ் சொல்லைத் திரிப்பது பொருந்தாது. பாரதக் காலத்தில் வடவருக்குத் தமிழரொடு மிகுந்த தொடர்பு ஏற்பட்டு விட்ட தனால், அமைச்சன் என்னும் தென்சொல் அக்கால வடநூல் வழக்கில் புகுந்ததென்று கொள்ளுதற்கு எதுவுந் தடையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/206&oldid=1431704" இலிருந்து மீள்விக்கப்பட்டது