பக்கம்:தேவநேயம் 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

254 தேவநேயம் அழிந்துபோன.... தனவும்” கடைக்கழகத்தாராற் பாடப்பட்ட "பரிபாடலுட்பல வும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும்” இப்போதில்லை. தலைக்கழகக்காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக்கழகத் திலக்கணமாகிய மாபுராணமும் இசை நூலும் பூத புராணமும் இப்போதில்லை. இனி, அடி, நூல், அணியியல், அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரிய மாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திர காதை, களவு நூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கைபாடினியம், குண்டலகேசி, குண நூல், கோள் நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா , சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கைபாடினியம், சிறுகுரீஇயுரை, சுத்தானந்தப் பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகை யோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்ச பாரதீயம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனா பதியம், பரி நூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு. பாட்டு மடை பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது), புணர்ப்பாவை, புதையல் நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், மந்திர நூல், மயேச்சுரர்யாப்பு, மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதரகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக்கழகக் காலத்திலும் பிற் காலத்திலுமிருந்தவை யிப்போதில்லை, பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி, ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடகநூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம், பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம், திருவல்லை யந்தாதி முதலியவை, இதுவரையறியப்படாத நூல்களாகச் சாஸனத் தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன. கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல்களில் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பைத் தொள்ளாயிரம், எதிர் நூல் முதலியவை இன்னும் வெளிவரவில்லை. இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணாயிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந்தனவென் றொரு வழிமுறை வழக்குள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/281&oldid=1431998" இலிருந்து மீள்விக்கப்பட்டது