பக்கம்:தேவநேயம் 1.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

282 தேவநேயம் ஆகமம் ஆகமம் வேதப்பிராமணர் தென்னாட்டிற்கு வந்தவுடன், மதக்கொண் முடிபு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திர மொழிகள் முதலியன பற்றிய நூல்களை அமைத்துக் கொண்டனர். அவை சிவ நெறி பற்றியவாயின் ஆகமம் என்றும் திருமால்நெறி பற்றியவாயின் ஸம்ஹிதை யென்றும், சாக்தம்பற்றியவாயின் தந்த்ரம் என்றும், பெயர் பெறும். ஆகம = வந்தது, தோன்றியது, வழிவந்த நூல். பல்வகை நூல்கள் பாணினீயம் (அஷ்டாத்யாயீ) இயற்றப் பெற்றது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டு. அர்த்த சாஸ்திரம் சாணக்கியரால் இயற்றப் பெற்றது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. பிற்காலத் தர்ம சாஸ்திரங்கள் மநுதர்ம சாஸ்திரம் (கி.பி.200); யாஞ்யவல்கிய ஸ்மிருதி (கி.பி.400), நாரத ஸ்மிருதி (கி.பி.500), (வ.வ) ஆகவம் - ஆஹவ (இ.வே.) அகவுதல் = அழைத்தல், போருக்கழைத்தல், அறைகூவல். அகவு - அகவம் - ஆகவம் = போர். வடவர் ஆஹ்வே என்று மூலங்காட்டுவர். ஹ்வே என்பது அகவு என்பதன் திரிபு. | ஆ என்பது பொருளற்ற முன்னொட்டு, (வ.வ.82) ஆகாரச் சுட்டு முந்தியல் தமிழர் சேய்மையைக் குறித்தற்கு வாயை அகலத் திறந்த போது, அது ஆகார வொலிக்கே ஏற்றதாயிருந்ததினால், அவ் வொலியைச் சேய்மைச் சுட்டாக்கினர். சேய்மைச்சுட்டு பெயர் ஆது - அது ஆன் = அவ்விடம் அல்- அஃது - அத்து. அவ் - அவ - அவை அவன், அவள், அவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/299&oldid=1432017" இலிருந்து மீள்விக்கப்பட்டது