பக்கம்:தேவநேயம் 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆயிரம் பாவாணர் 311 றென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. (கழகத்தின் 1008ஆவது வெளியீட்டு விழா மலர்) ஆயம் ஆயம் - ஆய (இ.வே.) தாயம் - ஆயம் = உரிமை, கடமை, கடத்தக்கூலி, தாய ஆட்டக்காய், தாய எண் அல்லது பணையம். உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். (குறள், 933). ஆயத்தில் கஞ்சி ஆற்றில் நீந்தினது போல், என்பது பழமொழி. இருக்கு வேதத்தில் ஆய என்னும் சொல் வந்துசேர்கை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது (11, 38: 20). பாணினீயம், மனுஸ்மிருதி, மகாபாரதம் முதலிய பின்னூல்கள் வருவாய், வரி, ஊதியம் முதலிய பொருள்களில் ஆள்கின்றன. ஆய என்னும் சொற்கு ஆ-இ என்னும் மூலங் காட்டுவர். இ என்பது இய் என்னும் தென்சொல்லின் சிதைவாம். இய்-இயல், இயங்கு, (வ.வ. : 84.) ஆயம் : (க) தாய் - தாயம் = தாய்வழியுரிமை. முதற்காலத்திற் குடும்பத் தலைமை தாங்கியது தாயே. தாயம் - ஆயம் = உரிமை. தாயம் - தாய (வ.), ஆயம் : (உ) வா - ஆ - ஆயம் = வருவாய், வரி, கட்டணம். ஓடிவா என்பது கொச்சை வழக்கில் ஓடியா என்று சொல்லப்படுதல் காண்க, வா என்னுஞ் சொல்லே ஆவ் என்று முன்பின்னாக முறை மாறி இந்தியில் வழங்கும். ஆயம் - ஆய (வ). (தி.ம. 737) ஆயிரத்தாழி கோலப் பானையை ஆயிரங்கண்ணுப் பானையென்றும், அரசாணிப் பானையென்றும் ஆயிரத்தாழியென்றுஞ் சொல்வ துண்டு . (ததி22, ஆயிரம் ஆயிரம் - ஸகஸ்ர (இ.வே.) அயிர் = நுண்ம ணல். அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால், மணற் பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. வாழிய - நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம் 9). நீ நீடுவாழிய ... வடுவாழ் எக்கர் மணலினும் பலவே (புறம். 55).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/328&oldid=1432048" இலிருந்து மீள்விக்கப்பட்டது