பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

11

கடவுள்கள்' என்று கருதும் நமது பாமர மக்களின் ஏமாளித்தனத்தைப் பார்க்கும் போது நமக்குப் பரிதாபம் பிறக்கிறது.

' இந்திரனுடைய இலட்சணந்தான் இப்படி என்று *எண்ணி விடுவதற்கில்லை, ஆரியர்களின் பட்டியலிலே காணப்படும் வேறு தேவர்களின் குணாதிசயங்களும், இதற்கு இம்மியும் குறைந்ததாகக்கூறுவதற்கில்லை. ஒரு தேவனை மற்றோர் தேவன் தோற்கடிக்கிறான். எதில்? தூய்மையிலா? வாய்மையிலா? கடவுட் தன்மையிலா? நீதி நேர்மையிலா? தயை தர்மத்திலா? இல்லை இல்லை; காமாந்தகாரத்தில் -

வேத ஒலி நிறைந்ததும், நாரத கானமும் நல்லோ 'ரின் நாதமும் கமழுவதும், - ஓம்ப்புகை சூழ்ந்திருப்பதும், - இராஜ் அம்சங்கள் அழகுற உலவும் தாமரைத் தடாகங் - கள் நிரம்பியதும், மந்தமாருதம் வீசும் மாண்புடையதும், வேத ஒழுக்கமுற்றநல்லோர் சென்று அடையும் புண்ய பூமியாக இருப்பதுமாகச் சித்தரிக்கப்பட் டிருக்கிறது. பிரம்மலோகம். இங்குக் கொலுவீற்றிருக்கும் சிருஷ்டி கர்த்கா ! பிரம்மன். இவருடைய லீலைகளோ அனந்தம்: சிருஷ்டி கர்த்தாவின் லீகளிலே மிகச் சிலாக்கிய மானது, தானே சிருஷ்டித்த மங்கையைத்தானே மணம் செய்து கொண்டது. சரசுவதிக்குத்தந்தையும் பிரமனே; கணவனும் அவரே! மக்கள் மொய்தீண்டல் உடற்கின்பம், என்ற தத்துவத்தைப் பிரம்மன் தனது காமத்துக்குத் துணை கொண்டார் போலும். - சிருஷ்டி கர்த்தாவைப் பற்றிக் கதைகளைச் சிருஷ்டித்தவன். அவருக்குச் சீலத்தை, சாந்தத்தை, ஒழுக்கத்தைச் சூட்டி யிருக்கக் . .. .