பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

25


இவன் பிறந்த இடமே புண்யபூமி கோசல்காடு, - கோச்ல - நாட்டிலே கிரிநாதன் என்பவனின் மகன் குணநிதி என்பவன் இருந்தான். இப்பார்ப்பனன் குரு பத்தினியைக் கற்பளித்தான். சல்லாபம் கெட்டு விடுமே என்று அஞ்சி குரு இருக்கும்வரை தொல்லை தானே என்று கருதி துணிந்து குருவையே கொலையும் ' - செய்தான். இவை மட்டும் குணமெனும் நிதியைத்தராது என்று எண்ணினான் (நீ..லும் இக்குணநிதி. எனவே தாய் தந்தையரைக் கொன்றான். என்ன நடந்தது? குணகிதிக்குக் குட்டம் வந்ததா, குலை நோய் கண்டதா? - கண் கெட்டதா; கைகால் பட்டுப் போயிற்றா? இல்லை! - இறைவன், அவனை ஏதும் செய்தாரில்லை. ஊரார் 'கோபித்து அவனைக் காட்டிலே விரட்டினர். அங்கு அவன் இறந்தான். -- -

ஒழிந்தானா பாவி! அவனுக்கு அந்தக் கதிதானே கிடைக்கும்! என்று கூறிவிடாதீர். கதைமுடியவில்லை. குணநிதி இறந்த உடனே யமபடர் வந்தனர் குருத் துரோகியை, பெற்றோரைக் கொன்ற பேயனை -- குரு பத்தினியைக் கற்பழித்தகாமுகனை, அவர்கள் எந்தெந்த கரகத்திலே தள்ள எண்ணினரோ தெரியவில்லை. யம * படர்கள் அவனை இழுத்துச் செல்லத் தொடங்கியதும் சிவகணங்கள் வந்துவிட்டன. :

- ஆஹா! என்ன ஆண்வம், யமபடர்காள்! எமது சிவனடியாரை அணுகும் துணிவு எங்கனம் பெற்றீர்? -

'சிவனடியாரை நாங்கள் இம்சிக்க வருவோமா? - * இவன் குணநிதி, குருத்து ரோகி" -