பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

29

சுதந்திரக் கொடியைத் - தாங்குகின் றன; ஆராய்ச்சி வாளைப் பிடிக்கின்றன; அறிவுச்சுடரை ஏந்தி உள்ளன; ஆர்ப்பாட்டக்காரரை அடக்குகின்றன; அரசுகள் நடத்துகின்றன; அந்தக் கரங்களே கரங்கள். மற்றவை மரங்கள்!" என்றான் வீரன் ஆர்வத்தோடு. -

வெளிநாட்டவரின் கரங்களைப் புகழ்வதே உன் வேலையா, வீரா? நம் நாட்டுக் கரங்கள் லேசா?" என் றேன் நான்.

கூப்பிய கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற் றைப் பிசையும் கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற் கரம்"- என்று வர்ணித்தான் 'வீரன், வெறுப்புக் கலந்த குரலுடன்,

"அதற்கென்ன செய்யலாம்?" என்று நான் கூறி னேன். வீரன் திருப்தி அடையவில்?ல. "பரதா! கப்ப லோட்டும் கரம், கோட்டை எதிரே நின்று கொடி தாங் குங்கரம்; பாட்டுமொழி ஏட்டைத் தாக்கும் கரம் இல்லை என்பதற்கு, வெளிநாட்டான் மீது மட்டும் பழி சுமத்தி னால் போதாது. களிமண்ணுங் கையுமாக நம்மவரை இருக்குமாறு அவனா சட்டம் இயற்றியிருக்கிறான்? வெட்டி வேலைக்குக் கரங்களைப் பயன்படுத்தும்படி வெள்ளையனா , பணிச்தான்? வீணருக்குழைக்கும்படி அவனா ஏவுகிறான்?” என்று வீரன் கேட்க, “எனக் கொன்றும் புரியவில்லையே, களிமண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?" என்று நான் வீரனைக் கேட் டேன். "கைவண்ணங் காணத்தானே போகிறாய். திங் கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்ன. வாக இருக்கும் தெரியுமோ! - களிமண்ணுங் கையுமாகத்