பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

33


நாட்டு மக்களின் நிலை தெரியாமல், நாட்டுடைய நாடியைப் பிடித்துப் பார்க்க வகையின்றி, பகுத்தறிவுச் சுடரொளி வீசும் இந்தக் காலத்திலும் இருண்ட இந்தி யாவிலே ஒளியின்றி, இருடிகள் தர்பார் நடத்துவதும், அரவிந்தர்கள் அலைகடல் குளிர்ந்த காற்று வீச ஆஸ்ர மம் அமைப்பதும், குன்றின்மீது கோட்டை எழுப்பிக் கொண்டு மகரிஷிகள் மன்னர்போல் மாநிதியுடன் தர்பார் நடத்துவதும், சங்கராச்சாரிகள், சில ஜில்லாக் களிலே சோணகிரிகள் தரும்சோடசோபசாரம் பெற்று ஜெகமெங்கும் குருவென்று ஜம்பம் பேசுவதும், தம்பி ரான்கள் , சைவத்தின் சரசத்திலே சகல சுகமும் பெற்றுச் சகல சம்பத்துடன் விளங்குவதும் ஆகிய இந்தக் காரியங்கள், அறிவுப் பெருக்கெடுத்தோடும் இந்தக் காலத்திலேயும் நடைபெறலாகுமா என்று கேட்கின்றனரா? துணிந்து கேட்பவர்கள் மீது கல்வீர் சும், சொல்வீச்சும் எவ்வளவு! அதிலே தப்பு வோரைத் தள்ளிடவைதிகர்கள் வகுத்துள்ள குழிகள் எவ்வளவு!

நெறியிலா தவனுக்கு நெறிகாட்ட, ஒளி காணாதவ னுக்கு ஒளி காட்ட ஒரு ஜோதி-ஆண்டவன்!

அசுத்தமான உலகில், சுத்தமாக இருக்கவேண் டும் என்பதை விளக்க, அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க, - கபடம், வஞ்சகம் காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன்-ஆண்டவன். எங்கும் நிறைந்து- எந்தச் சக்தியும் பெற்று- எல்லை யில்லாத இன்பத்தின் வடிவமாகி, சத்தியசொரூபியாகி -|3