பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

தேவலீலைகள் !

என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் சைவர்கள், இந்தப் புராணத்தையும் பூரிப்போடு பேசுவர்; இதைக் கூறியும் சிறு பூசவர்! காட்டானைகளின் கலவியைக் கண்...தும் காமனைக் கருக்கியவருக்கு உள்ளத்திலே காம உணர்ச்சி ஓங்காரமாகி விட்டது! ஆம்! கடவுளுக் குத்தான் தோழரே இந்த உணர்ச்சி வந்தது! தாங்க ளும் காட்டானைகளாஇக் கலவி இன்பத்தைக் கண்டு சாம ரசத்தை உண்டுகளிக்க எண்ணினார். உமையும் சரி என்றார் இருவரும் யானை உருக்கொண்டனர். காட் டிலே திருவிளையாடல் நடந்தது! அந்தப் போகப் பிரசாதமே யானைமுகக் கணபதி! பிள்ளையார் பிலப் புக்கு இஃதோர் வரலாறு.

இதன் ஆபாசத்தைப் பாரீர்; இத்தகைய ஆபா சத்தை ஆண்டவன் செயலென்று கூறிடும் அன்பர் களைவிட, கடவுளை நிந்திக்கும் கயவர் உண்டோகூறீர்'.. கருணாமூர்த்தி, கட்டுகளைக் கடந்தவர், மும்மலமற்றவர், பஞ்சேந்திரியங்களின் சேட்டைகள் பரமனை அணுகா என்று பேசுவதும், பின்னர் கண்ணுதற் கடவுள் காட் டானைகள் கலவி செய்யக்கண்டுகாமங்கொண்டு, கணபதி யைப் பெற்றார் என்பதை உரைப்பதும் பேதைமை யன்றோ, பித்தமன்றோ என்று கேட்க உனக்குஉரிமை கிடையாதா? - மற்றுமோர் வரலாறு கேளீர்! பார்வதி குளிக்கச் செல்கையில், தன் உடம்பிலிருந்த அழுக்கை உருட்டித் திரட்டி ஒரு பிள்ளையை உற்பத்தி செய்து, தன் வீட்டு வாயிலைக் காவல் புரியவைத்தாராம். பத்துமாதம் சுமந்து பாமரர் பெற்றால், பார்வதியார் உடல் அழுக்கை உருட் டிப் பிள்ளையாக்குகிறார்! கடவுள் அல்லவா! இதுகூடம்