பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தேவலீலைகள் !


பாக்ஞவல்கியர் காலத்துக்கு முன்பு, விநாயகர், ஆரியருக்குக் கிடையாதென்றும், பின்பு நான்கு விகா யகர்கள் தோன்றினரென்றும், அவர்கள் நாசஞ்செய் யும் கெட்ட குணங்கொண்டே சென்றும், இரத்தம் சோறும் இறைச்சிப் பலியும் வேண்டினரென்றும், பிறகு நான்கு விநாயகர் போய் ஒரு மொஹாகணபதியாக் கப்பட்டதாகவும், இந்துமார்க்க தத்துவ விளக்கமுரைக் கும் பாபு பகவான் தாஸ் கூறுகிறார்.

எந்தப் புராணத்தை நீங்கள் நம்பினாலுஞ் சரியே, அதிலே ஏதாவது ஆபாசமற்றதாக. அ ஜூவுக்குப் பொருத்தமானதாக, அன்புக்கு இருப்பிடமாக, அநாக ரீக மற்றதாக இருக்கிறதா என்று அன்பர்களே எண்ணிப் பாருங்கள். இத்தகைய கதாநாயகரைச் களி மண்ணால் செய்து வைத்துக்கை தொழும். போக்குசரியா என்பதை ஆற அம்ற யோசிக்கலாகாதா?

இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளச் சேற்றிலே உழலு மட்டும், முன்னேற்றமேது. வாழ்வு எது? களிமண்ணுங் கையுமாக இருக்கும் தோழர்களே! கசடர் புனைந்துரை களைக் கடவுட் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில், மம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும், இவைகளை விட்டு விடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள் அந்த நாள் என்று வரும். என்ற ஏக்கமே எனக்குப் பிறந்தது வீரனின் பேச்சுக் கேட்டு, இதனைத்தான் உங்கட்கும் உரைத்தேன், உள்ளத்தில் கோபமின்றி, யோகித்துணர்க!

0000

ஸ்ரீமகள் அச்சகம், சென்னை-1.