பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவலீலைகள்!

தேவாதி தேவா! தேவர். தலைவா! மூவரே, மூவரில் முதல்வனே" என்று பக்திமான்கள் நித்த நித்தம் சத்தமிட்டுப் பூஜிக்கக் கேட்கிறோம். சித்தம் சிதைந்தவனை வித்தகனே என்று அழைப்பது போலக் குடியனைக் குணவானே என்று - கொண்டாடுவது. போல, குக்கலைக் கேசரி என்று அழைத்தல் போல . இருக்கிறது... காமவெறியர்களை தேவா என்றும் மூவா என்றும் அழைக்கும் போக்கு. ஏனெனில் - எந்தப் பக்தியினால் யாராரை, இங்ஙனம் ஆரிய மதத்தைக் கடைப்பிடிக்கும் குறை கதியினர் பூஜிக்கின்றனரோ : அந்த மூர்த்திகளின் லீலைகள். கேவலம் காமாந்த காரம், கபடம், கயமைக்குணம், காட்டுயிராண்டித் தனம் நிரம்பியதாக இருப்பதை, அதே பக்திமான்கள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளிலிருந்து காண லாம். - தேவவீலைகள் - என்ற தலைப்பிலே இந்தக் காமக்கூத்தர்களின் கோலாகலத்தை ஓரளவு தரு கிறேன். கருத்துள்ளோர் சிந்திக்கட்டும்; பழமைவிரும்பி கள் வெட்கித் தலைகுனியட்டும்; வாலிப உலகு - கை கொட்டி நகைக்கட்டும்

0: -

- இந்திர தேவா! இதுவே தக்க சமயம், தாமதிக்க வேண்டாம். உடனே புறப்படுக!"